அரிக்கொம்பன் யானையை பிடிக்க நடவடிக்கை !

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 11 உயிர்களை பலி வாங்கிய அரிசி கொம்பன் காட்டு யானையை கடந்த மாதம் 27-ந் தேதி கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தேக்கடி வனப்பகுதியில் விட்டனர். அதன் பிறகு மெல்ல மெல்ல தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது. கடந்த 27-ந் தேதி லோயர் கேம்ப் தனியார் திருமண மண்டபம், சுருளியாறு மின் நிலையம், நாட்டுக்கல், நந்தகோபாலன் கோவில் தெருக்களில் சுற்றித் திரிந்தது. அன்று கம்பத்தில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டு…

மேலும் படிக்க

‘AMUL’ நிறுவனம் நுழைவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் -SEEMAN

குஜராத் மாநில அரசின் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் கீழ் இயங்கும் அமுல் நிறுவனம், தமிழ்நாட்டில் பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசின் ஆவின் பால் நிறுவன கொள்முதல் எல்லையை, வேற்று மாநில நிறுவனம் அபகரிப்பதென்பது மாநில சுயாட்சிக்கு எதிரான அத்துமீறலாகும். இந்தியாவின் முன்னணி பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான அமுல் (Anand Milk Producers Union limited – AMUL) தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட…

மேலும் படிக்க

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு

தமிழகத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் நாளையுடன் (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. இது பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. இருப்பினும் மேலும் சில தினங்களுக்கு கடும் வெப்பம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் தலா 107 டிகிரி, வேலூரில் 106 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம் 104 டிகிரி, பாளையங்கோட்டை, புதுச்சேரி, நாகப்பட்டினம், மதுரை, மதுரை விமான…

மேலும் படிக்க

விசாரணைக்கு அழைத்து வரும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும் -HIGHCOURT

சேலத்தைச் சேர்ந்த ரஜினி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தனக்கு எதிரான புகார் குறித்து விசாரிப்பதற்காக ஆஜராகுமாறு போலீசார் தன்னை துன்புறுத்துவதாகவும், விசாரணை என்ற பெயரில் போலீசார் தன்னை துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி சத்திகுமார் சுகுமார குருப் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் மனுதாரருக்கு எதிராக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் அது குறித்து விசாரணை நடத்துவதற்காகவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது….

மேலும் படிக்க

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை

தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,600க்கு விற்பனையாகிறது. அதைபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசு குறைந்து 77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 77,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க

ஊருக்குள் புகுந்த அரிக்கொம்பன் காட்டு யானை

கேரள மாநிலத்தில் 7 பேரை கொன்று அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பம் யானையை, கடந்த மாதம் மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்தனர். பின்பு அதனை தமிழக – கேரள எல்லை பகுதியில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்தில் வனத்துறையினர் விட்டனர். ஆனால் அந்த யானை தேனி மாவட்டம் மேகமலை எஸ்டேட் பகுதிக்கு சென்று, அங்கு உள்ள தொழிளாளர்கள் மற்றும் அவர்களின் குடியிருப்புகளை நாசம் செய்தது. இந்நிலையில், அரிக்கொம்பன் யானை கூடலூரில் லோயர் கேம்ப் பகுதியில் உள்ள…

மேலும் படிக்க

சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக நாளை பதவியேற்கிறார்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அதன்பின்பு, தலைமை நீதிபதி பணியிடத்துக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. அதேவேளையில் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமிக்கப்பட்டார். அவர் ஓய்வுபெற்றதை தொடர்ந்து மூத்த நீதிபதியான டி.ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 24-ந்தேதி ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த எஸ்.வைத்தியநாதன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். புதிய தலைமை நீதிபதி அவர் நேற்று…

மேலும் படிக்க

ஜூன் 7-ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு

தமிழகம் முழுவதும் ஜூன் 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், வருகிற கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். மேலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசித்தார். அப்போது வெப்பம் இன்னும் குறையவில்லை என்றும், பள்ளிகள்…

மேலும் படிக்க

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை | Today’s Petrol and Diesel Price in Chennai

சென்னையில் தொடர்ந்து 371-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. Petrol and diesel prices remain unchanged in Chennai for the 371st consecutive day. Accordingly, one liter of petrol is sold at 102 rupees 63 paise and diesel at…

மேலும் படிக்க

மாவட்ட எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அண்ணாமலை

இன்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொள்வதாக இருந்தது. இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கின் ஆதரவாளர்கள். வருமான வரித்துறையினரை தங்கள் பணியைச் செய்யவிடாமல் முற்றுகையிட்டு அச்சுறுத்தியதோடு அவர்களது வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், வருமான வரித்துறை அதிகாரிகளின் மீது திமுகவினர் நடத்திய வன்முறை தாக்குதல்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram