மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்

கர்நாடக மாநில துணை முதலமைச்சர் D.K. சிவக்குமார், மத்திய நீர்வழித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடந்த ஜூன் 20 ஆம் தேதி அன்று எழுதியுள்ள கடிதம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அக்கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாகவும், தமிழ் நாட்டில் இரண்டாம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்கள்…

மேலும் படிக்க

தக்காளி விலை உயர்வுக்கான காரணம் ?

கோயம்பேடு காய்கறி சந்தையில் ரூ. 90-க்கு விற்ற தக்காளி, தற்போது மேலும் 10 ரூபாய் உயர்ந்து தற்போது ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நாளை (திங்கட்கிழமை) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல இடங்களிலும் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல், தக்காளி விலை உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பு…

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர்,…

மேலும் படிக்க

மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் பரிசளித்த உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் கடைசிப்படமாக அறிவிக்கப்பட்ட இத்திரைப்படம் கடந்த மாதம் ஜூன் 29-ம் தேதி முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. மாமன்னன் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநருக்கு மினி கூப்பர் கார் ஒன்றை உதயநிதி பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்து உதயநிதி…

மேலும் படிக்க

செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டால் பலர் சிக்குவார்கள்

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அ.தி.மு.க கொண்டு வந்த ஒவ்வொரு திட்டத்தையும் ரத்து செய்கின்ற காட்சியைத்தான் சாதனையாக பார்க்கிறோம். தமிழகத்தில் மின் கட்டணம் 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கைத்தறி, விசைத்தறி, உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. தமிழத்தை காப்பாற்ற முடியாத முதலமைச்சர் ஸ்டாலின், பீகார் சென்று சர்வகட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்குகிறாராம். நான் முதல்-அமைச்சராக இருந்தபோது, உங்கள் மீது வழக்கு போட்டிருக்க முடியும். ஆனால் வழக்கு போடவில்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற…

மேலும் படிக்க

அமைச்சர்கள் இலாகா மாற்றம்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் 13-ம் தேதி இரவு கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வரும் 28-ம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆகிய துறைகளை மின்துறையை நிதியமைச்சர்…

மேலும் படிக்க

பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தேசிய மகளிர் ஆணையம் உடன் நிற்கும்..!!

பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தேசிய மகளிர் ஆணையம் உடன் நிற்கும் என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கூறினார். சென்னை, திருவண்ணாமலையில், ராணுவ வீரரின் மனைவி அவமானப்படுத்தப்பட்டதாக சென்னை, டிஜிபி அலுவலகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு மனு அளித்துள்ளார். திருவண்ணாமலை ராணுவ வீரரின் மனைவி அவமரியாதை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தோம். அதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக டிஜிபி உறுதி அளித்துள்ளார். மகளிருக்கு…

மேலும் படிக்க

விஜயின் மாணவர் சந்திப்பு – அரசியலை நோக்கிய அடுத்த நகர்வா…?!!

தலைவர்களுக்கு மரியாதை, தொகுதிவாரியான புள்ளி விவரம், நலத்திட்ட உதவிகள், இலவச மதிய உணவு ஆகியவற்றைத் தொடர்ந்து மாணவர்கள் சந்திப்பு என நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகள், அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. இது அரசியலை நோக்கிய பயணம் என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்… அரசியலுக்கு வருகிறேன் என்று நடிகர் விஜய் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், திரைப்படங்களிலும் திரைப்பட விழாக்களிலும் அவர் பேசும் வசனங்கள் அரசியல் வருகையை சொல்வதாக ரசிகர்கள் நம்புகிறார்கள்….

மேலும் படிக்க

ஒடிசா ரெயில் விபத்து: 8 தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்..!!

சென்னை, சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் பூங்காக்கள், சாலை தடுப்புகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 924 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்….

மேலும் படிக்க

அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 2-வது தளத்தை இடிக்க வேண்டும் – HIGHCOURT உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், போரூரில் உள்ள ஜெயபாரதி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு தாக்கல் செய்துள்ள மனுவில், “எங்கள் பகுதியில் வசிக்கும் செங்கன், தனக்கு சொந்தமான கட்டிடத்தின் மேல்மாடியில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொபைல் டவரை வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த கட்டிடத்தின் 2-வது தளம் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டின் மேல் மொபைல் டவர் வைத்தால், அதில் இருந்து கதிர்வீச்சு வெளியேறும். அதனால், அருகில் குடியிருப்போருக்கு பாதிப்பு ஏற்படும். எனவே,…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram