நடிகை “சமந்தா”, 2 ஆதரவில்லா குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..!!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா.  இவர் மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  சிகிச்சையின் பலனாக அவருக்கு உடல்நலம் தேறி வந்த நிலையில்,  மீண்டும் மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் அண்மையில் வெளியாகின.இதனை தொடர்ந்து,  மயோசிடிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மயோசிடிஸ் இந்தியா என்ற…

மேலும் படிக்க

‘நயன்தாரா’ நடித்துள்ள “அன்னபூரணி” திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது..!!

நயன்தாராவின் 75வது படமாக அன்னபூரணி படம் உருவாகி வருகிறது. படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிந்திரன் தயாரிக்க படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் செஃபாக நடிகை நயன்தாரா தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து திரைக்கு வர உள்ள தங்கலான் படத்தின் டீசர் வெளியானது..!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணையும் படம் ‘தங்கலான்.  பா.ரஞ்சித்தின் தனது  ‘நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு பிறகு இந்தப் படத்தை இயக்குகிறார்.   இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.  இப்படத்தில் நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இந்தப் படப்பிடிப்பின்போது நடிகர் விக்ரமின் விலா எலும்பில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

சர்வதேச அளவில் விருதுகளை அள்ளி குவித்த ‘கூழாங்கல்’ திரைப்படம்..!!

வினோத்ராஜா இயக்க விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. பொட்ட காட்டில் வசிக்கும் குடும்பம் அந்த குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளை அடிப்படையாக வைத்து எடுத்திருக்கும் சின்ன பட்ஜெட் திரைப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.மதுபழக்கத்திற்கு மிகவும் அடிமையான கணபதி (கருத்தடையான்) என்ற நபர் தண்ணீர் பஞ்சத்துடன் உள்ள வறண்ட பகுதியில் வாழ்ந்து வருகிறார். தன்னுடைய மனைவியோ கோபித்து கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்றுவிடுகிறார். இந்நிலையில், தனது மகனை (செல்லப்பாண்டி) பள்ளியில்…

மேலும் படிக்க

நடிகர் ‘விநாயகன்’ செய்த ‘சம்பவங்கள்’..!!

அடிக்கடி சர்ச்சை சம்பவங்களில் சிக்கும் மலையாள நடிகர் விநாயகன் இப்போதும், இதற்கு முன்பும் செய்த ‘சம்பவங்கள்’ குறித்து பார்ப்போம். அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் அழுத்தமான வில்லன் நடிகராக பாராட்டப்பட்டவர் நடிகர் விநாயகன். படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ரஜினியே அவரது நடிப்பை பாராட்டியிருந்தார். சமூக வலைதள ‘கன்டென்ட்’களில் ரஜினியை விட விநாயகனே வியாபித்திருந்தது சமீத்திய வரலாறு. இதற்கு முன்னதாக அவர் தமிழில் ‘திமிரு’, ‘சிலம்பாட்டம்’,‘மரியான்’ உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் வெளியான…

மேலும் படிக்க

நடிகை அமலா பால் புதிய உறவில்..!!

பிரபு சாலமன் இயக்கிய மைனா, விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா, தனுஷின் வேலையில்லா பட்டதாரி, ஆடை உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் அமலா பால். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்குநர் விஜய்யை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் நடித்து வந்த அமலா பால், விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இப்போது அவர் மீண்டும் காதலில் விழுந்துள்ளார். குஜராத் மாநிலம்…

மேலும் படிக்க

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா – உமாபதி திருமண நிச்சயதார்த்தம் இன்று..!!

நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என 2 மகள்கள். ஐஸ்வர்யா, விஷால் நடித்த `பட்டத்து யானை’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ‘சொல்லி விடவா’ என்ற படத்தில் நடித்தார். இப்போது அர்ஜுன் இயக்கத்தில் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். இவரும் நடிகர், தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வந்தனர்.உமாபதி, ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படம் மூலம் அறிமுகமானார். அடுத்து, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ‘தண்ணி வண்டி’ உட்பட சில படங்களில் நடித்தார். இருவீட்டு…

மேலும் படிக்க

“நாங்கள் எந்த திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினாலும் ஏதாவது ஒரு விருதை வாங்கி கொண்டு வாங்கிவிடுகிறது” என ‘கூழாங்கல்’ படம் குறித்து விக்னேஷ் சிவன்..!!

ரௌடி பிக்சர்ஸ் – நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரித்து இயக்குநர் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான படம் கூழாங்கல். கூழாங்கல் படத்தின் படக்குழுவினர் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் இயக்குநர்கள் விக்னேஷ் சிவன் & பி.எஸ் வினோத் ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.  இது எங்கள் முதல் படம். ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக வித்தியாசமான, புதுமையான…

மேலும் படிக்க

‘லியோ’ திரைப்படத்தில் இடம்பெற்ற “I’m Scared” பாடலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது..!! 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘லியோ’. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி ‘லியோ’ திரைப்படம் வெளியானது.ரசிகர்களின் கலவையான விமர்சனங்களுடன் ‘லியோ’ திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. இத்திரைப்படத்தின் பாடல்களும் ரசிகர்களின் பிளே-லிஸ்ட்டில் ரிபீட் மோடில் ஒலித்துக் கொண்டிருக்கிறது….

மேலும் படிக்க

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி 2’ திரைப்படம் பிரபல ஓடிடி நிறுவனமாக ‘நெட்ஃப்ளிக்ஸில்’ இன்று வெளியாகியுள்ளது..!!

கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறுஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.13 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம்செப்.28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram