2023 ஆம் ஆண்டு உலக வரலாற்றில் அதிக வெப்பமான ஆண்டாக இருக்கிறது..!!

வெப்பநிலை உயர்வால் ஐரோப்பா,  வட அமெரிக்கா,  சீனா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் கடந்த ஆண்டில் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டன.  பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவதால், வறட்சி, வெள்ளம், வெப்ப அலை போன்ற மிகத் தீவிரமான காலநிலை மாற்றங்கள் நிகழ்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை சராசரி 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்ததை விட அதிகரித்துள்ளது என ஐரோப்பிய ஒன்றிய காலநிலை கண்காணிப்பு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தை விட, கடந்த ஆண்டில்தான்…

மேலும் படிக்க

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில்,  இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தின் முதல் தராவீஹ் தொழுகையில் பங்கேற்றனர்..!!

இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் இந்த மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால் முஸ்லிம்கள் இந்த மாதத்தை புனித மாதமாக கருதி மாதம் முழுக்க நோன்பினை கடைபிடிப்பார்கள்.நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் நோன்பு இருப்பார்கள்.  அதாவது காலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நோன்பு கடைபிடிப்பர்.  ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப ரமலான் மாதம் தொடங்கும்.

மேலும் படிக்க

மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் ஜிம்மி டொனால்ட்சன்,  வெறிச்சோடிய நகரத்தில் 7 நாட்களைக் கழிக்கும் சவாலை முடித்துள்ளார்..!!

உலகில் இதுபோன்ற பல இடங்கள் உள்ளன. அவை முன்பு மனிதர்கள் வாழ்ந்த இடங்களாக இருந்தன.  பின்னர் சில காரணங்களால் அந்த இடங்கள் முற்றிலும் கைவிடப்பட்டு யாரும் இல்லாத நகரமாக உள்ளது.  அங்கு மனிதனோ,  மிருகமோ யாரும் இல்லை.  குரோஷியாவில் ‘குபாரி’ என்று அழைக்கப்படும் ஒரு இடம் உள்ளது.  இது முற்றிலும் வெறிச்சோடிய ஒரு சிறிய நகரம்.இங்கு பெரிய கட்டடங்கள்,  உணவகங்கள் இருந்தாலும் இங்கு யாரும் வசிக்காததால் படிப்படியாகப் பாழடைந்து வருகிறது.  உலகின் கடினமான சவால்களில் ஒன்றாக கூறபடும்…

மேலும் படிக்க

உலகில் வாழும் மிகவும் வயதான நபரான மரியா மோரேரா தனது 117வது பிறந்தநாளைக் கொண்டாடினார்..!!

மரியா 1907 ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார்.  8 வயதில்,  அவர் தனது குடும்பத்துடன் ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தார்.  1918 இன் ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோய் மற்றும் ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரின் சோகமான காலங்கள் உட்பட அவரது வாழ்க்கையில் பல வரலாற்று நிகழ்வுகளை அவர் கண்டிருக்கிறார்.  1931 இல், அவர் ஜோன் மோரெட்டை மணந்தார்,  அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர்.  அவரது கணவர்,  தொழில்ரீதியாக மருத்துவராக இருந்தார்,  1976 இல் இறந்தார்.மரியா பிரன்யாஸ் மொரேரா தனது 117வது…

மேலும் படிக்க

‘ஆனந்த் அம்பானி’யின் வாட்சை பார்த்து வியந்த ‘மார்க் ஜுக்கர்பெர்க்’ மனைவி..!!

பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  இந்நிலையில், இந்த ஆண்டு குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற்றன.இந்த விழாவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல பிரபலங்கள்  பங்கேற்றனர். பில்கேட்ஸ்,  மார்க் ஜுக்கர்பெர்க்,  ரியானா,  இவாங்கா…

மேலும் படிக்க

உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது அலுவலகத்தின் அறைகளிலேயே தங்கிவிடுவாராம்..!! அதற்கான காரணம்..?!

டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் அந்த நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டார். இவர் டெஸ்லா,  ஸ்பேக்ஸ் எக்ஸ், போரிங் கம்பெனி பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். டெஸ்லா கார்கள் வெளியான சில நாள்களிலேயே டெஸ்லாவின் பங்குகள் பல மடங்கு உயர்ந்ததால் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். பின்னர், ட்விட்டர் நிறுவனத்தை இவர் அதிக…

மேலும் படிக்க

5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ‘ஜியோ’..!!

இந்தியாவில் ரூ.10,000 பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்சிலோனாவில் நடைபெற்று வரும் ‘மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் – 2024’-ல் இது குறித்த தகவலை குவால்காம் நிறுவன பொது மேலாளர் (ஹேண்ட்செட்ஸ்) கிறிஸ் பேட்ரிக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உள்ளது ரிலையன்ஸ் ஜியோ. கீபேட் மற்றும் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது….

மேலும் படிக்க

தேர்தல் vs தொழில்நுட்பம்..!!

கூகுளின் அல்ஃபபட் நிறுனத்திற்கு சொந்தமான  யூடியூப்  கடந்த 2005ல் தான் முதன்முதலாக உருவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. அதுவரை இணையதள போஸ்டர்கள், கட்டுரைகள், வலைப்பதிவுகள் மற்றும் தேர்தல் கணிப்புகள் என சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வந்தன. இதனைத் தொடர்ந்து வந்த யூடியூப்பையும் அமெரிக்க அரசியல்வாதிகள் கனகச்சிதமாக பயன்படுத்தி அதன் பலனை தேர்தலில் அறுவடை செய்தனர்.யூடியூப் 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 தொடங்கப்பட்டது. இதனை  பேபால் நிறுவனத்தில் பணியாற்றிய மூன்று முன்னாள் ஊழியர்களான ஸ்டீவ்…

மேலும் படிக்க

மொபைல் உலகின் முக்கிய நிறுவனமான ஜியோமி தனது இரண்டாவது எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது..!!

ஜியோமி நிறுவனம் பார்சிலோனாவில் நடைபெற்றுவரும் எம்டபிள்யூசி (மொபைல் வொர்ல்ட் காங்கிரஸ்) உலக மாநாட்டில் புதிய தயாரிப்பான எஸ்யூ7 செடான் காரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அக்வா ப்ளூ எஸ்யூ7 பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் திறன் சார்ந்தும் முக்கிய வரவாக இருக்க போவதாக துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சூப்பர்கார் ஆன மெக்லாரென் 720எஸ் போல இருக்கும் ஜியோமியின் இந்த கார் அதிகபட்சம் 265 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது.சீனாவைச் சேர்ந்த நிறுவனமான ஜியோமி, மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்…

மேலும் படிக்க

பாகிஸ்தான் : முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்..!!

பஞ்சாப் மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் சுயேட்சைகள் மரியம் நவாஸ் ஷெரீபுக்கு ஆதரவு தந்தனர்.பஞ்சாப் மாகாண சட்டசபையானது முதலில் கூட்டத்தொடரை தொடங்க உள்ளது. பஞ்சாப் சட்டசபையை வெள்ளிக்கிழமை கூட்டும்படி கவர்னர் பலிகுர் ரகுமான் அழைப்பு விடுத்திருந்தார். மூன்று முறை பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல் மந்திரியாக தேர்வு…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram