60 வயது பெண் “மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்” பட்டம் பெற்று சாதனை..!!

 வயதைக் கடந்த பிறகு அழகுப் போட்டியில் பங்கேற்பது என்பது அதிகம் பேசப்படாத  ஒன்று.  இந்நிலையில்,  60 வயது பெண் ஒருவர் அழகி போட்டியில் கலந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இத்தகைய ஆச்சரியமான சம்பவம் அர்ஜென்டினாவில் நடந்துள்ளது.  வழக்கறிஞராகவும், பத்திரிக்கையாளராகவும் பணிபுரியும் 60 வயதான Alejandra Marisa Rodriguez அழகிப் போட்டியில் கலந்து கொண்டார்.  அர்ஜென்டினாவின் லா பிளாட்டாவைச் சேர்ந்த இவர், அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற Miss Universe Buenos Aires 2024 போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். …

மேலும் படிக்க

ஏதன்ஸ் நகரம் திடீரென ஆரஞ்சு நிறமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்..!!

ஒருநாள் ரொம்ப களைப்பா இரவு தூங்க போறீங்க.. தூங்கி எழுந்து கண்ணை கசக்கிட்டு ஜன்னலை திறந்து பார்த்தா அப்படியே எல்லாமே ஆரஞ்சு நிறத்துல தெரிஞ்சா எப்படி இருக்கும்.., வானம் ஆரஞ்சு.. பூமி.. ஆரஞ்சு .. மரம் ஆரஞ்சுன்னு இருந்தா உங்களுக்கு முதல்ல என்ன தோணும்.. உங்க கண்ணுக்கு ஏதோ பிரச்னைன்னு தானே நினைப்பீங்க.. அதான் இல்லை.. அதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கு வாங்க பார்க்கலாம்.ஐரோப்பா கண்டத்தின் முக்கிய நாடுகளில் ஒன்றானது கிரீஸ் தலைநகரம் ஏதென்ஸ். இந்த…

மேலும் படிக்க

தைவான் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 200க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்..!!

 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது என அந்நாட்டின் மத்திய வானிலை ஆய்வு நிர்வாகத்தின் நிலநடுக்க அறிவியல் மைய இயக்குநர் வூ சீன்-வு இன்று தெரிவித்துள்ளார்.ஹுவாலியன் கவுன்டி பகுதியில் நேற்று மாலை 3.08 மணி முதல் இன்று மதியம் 1.30 மணி வரையில் மொத்தம் 247 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. இதேபோன்று. கடந்த 3- ந்தேதியில் இருந்து இதுவரை பதிவான நிலநடுக்கங்களின்…

மேலும் படிக்க

கடற்படை ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..!!

மலேசியா நாட்டின் பேராக் அருகே லுமுட் எனும் பகுதியில் கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளனர். சம்பவ இடத்திலேயே 10 பேரும் உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.மலேசிய கடற்படை தினத்தின் 90ம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள்…

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் ராப் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது..!!

உலக அளவில் இன்றும் பேசப்படுவது மோனாலிசா ஓவியம்.  இந்த ஓவியம் 16-ம் நூற்றாண்டில் லியோனார்டோ டா வின்சி எனவரால் பொப்லார் பலகையில் வரையப்பட்டதாக கூறப்படுகிறது.  மோனாலிசா ஓவியத்திற்கு லா ஜியோகொண்டா ஓவியம் என்ற பெயரும் சொல்லப்படுகிறது.  இது ஒரு எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். உலக அளவில் புகழ்பெற்ற ஓவியங்களில் மோனாலிசா ஓவியமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஓவியம் லூவர் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.  இந்த ஓவியம் பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவி லிசா கிரர்த்தினியின் உருவப்படம் என்றும், …

மேலும் படிக்க

பிரேசிலில் பெண் ஒருவர் மரணமடைந்தவரை வங்கிக்குக் அழைத்து சென்று கடன் பெற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!

பிரேசிலில் பெண் ஒருவர், தனது 68 வயதான உறவினரை வங்கிக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வந்து, அவரது பெயரில் கடன்பெற முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அவர் சக்கர நாற்காலியில் வரும்போதே தலை தொங்கியிருந்தபடியால், காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். இந்நிலையில், காவல்துறை நடத்திய விசாரணையில், அந்த நபர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்தது. ரியோ டி ஜெனிரியோ வங்கி ஊழியர்கள், அவசர உதவி சேவை மையத்தைத் தொடர்புகொண்டு உதவிக்கு அழைத்தனர். அப்போது, கடன்…

மேலும் படிக்க

பிரபல ஹாரி பாட்டர் தொடரின் கற்பனை வில்லன் லார்ட் வோல்ட்மார்ட்டை ஒத்திருக்கக்கூடிய ஒரு எறும்பு இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்..!! 

பிரபல ஹாரி பாட்டர் தொடரின் கற்பனையான வில்லன் லார்ட் வோல்ட்மார்ட்டை ஒத்திருந்தது.   இந்த எறும்பு இனம் மெல்லியதாகவும்,  வெளிர் நிறமாகவும் காணப்படுகிறது.  மேலும் இவை நிழலில் வாழக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  வடமேற்கு ஆஸ்திரேலியாவின் பில்பரா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இனத்தின் பெயர் லெப்டானிலா வோல்ட்மார்ட்.மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் டாக்டர் மார்க் வோங் மற்றும் பென்னலோங்கியா சுற்றுச்சூழல் ஆலோசகர் ஜேன் மெக்ரே ஆகியோர் இந்த எறும்பு இனம் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.    டாக்டர் மார்க் வோங்  இதன்…

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தேவாலயத்தில் புகுந்து பாதிரியார் மீது கத்திக்குத்து நடத்திய நபரை போலீசார் கைது..!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போன்டி கடற்கரை அருகே மிகப் பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது.  அந்த வணிக வளாகத்தில் கடந்த 13 ஆம் தேதி துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியது.  இச்சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.  மேலும் பலர் படுகாயமடைந்தனர்., சிட்னி நகரில் மற்றுமொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.  ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள வாக்லே பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பெர்ட் தேவாலயத்தில் வழிபாடு நடைபெற்று கொண்டிருந்தது.  அப்போது அங்கு புகுந்த மர்ம நபர்,  அங்கு…

மேலும் படிக்க

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர்..!!

சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1ம் தேதி இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், அங்குள்ள ஈரான் தூதரகம் கடும் சேதமடைந்தது. இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் கடுங்கோபத்தில் உள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்பதால், மறு உத்தரவு வரும்வரை இந்தியர்கள் இஸ்ரேல், ஈரான் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை…

மேலும் படிக்க

‘GOAT’ படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாகும்..!!

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில்  The Greatest of All Time படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் ஜெயராம்,  பிரபு தேவா,  மோகன்,  பிரஷாந்த், வைபவ்,  சினேகா,  லைலா,  மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.  நடிகர் விஜய்க்கு இது 68- வது படம்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram