வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை..!!

அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா – தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், வடகொரியா இன்று ஏவுகணை சோதனை செய்துள்ளது. வடகொரியா…

மேலும் படிக்க

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து : 5 மெக்ஸிகோ பயணிகள் உட்பட 6 பேர் பலி..!!

நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற மனாங் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் ஹெலிகாப்டர் இன்று காலை திடீரென மாயமானது. உள்ளூர் நேரப்படி, இன்று காலை 10.12 மணிக்கு, ஹெலிகாப்டர் ரேடாரின் தொடர்பை இழந்துள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, காணாமல் போன நேபாள ஹெலிகாப்டரில் 5 மெக்ஸிகோ பயணிகள் மற்றும் விமானியுடன் சேர்த்து மொத்தம் 6 பேர் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டரை, மூத்த விமானி சேட் பி குருங் என்பவர் இயக்கியுள்ளார். ஹெலிகாப்டரில்…

மேலும் படிக்க

ஐரோப்பிய நாடுகளில் ஒரே ஆண்டில் கோடை வெயிலுக்கு 61,000 பேர் பலி..!!

உலக நாடுகள் அனைத்தும் காலநிலை மாற்றத்தால் இயற்கை பேரழிவுகளை சந்தித்து வருகின்றன. ஐரோப்பிய யூனியனின் 35 நாடுகளில், கடந்த 2022-ம் ஆண்டு கோடைக் காலத்தில் வெப்பத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை குறித்து பார்சிலோனா குளோபல் ஹெல்த் இன்ஸ்டிட்யூட் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த நிறுவனம் செய்த ஆய்வின் முடிவில், கோடை காலகட்டத்தில் மட்டும் 61,000-க்கும் அதிகமானோர் பலியானது தெரியவந்துள்ளது. அதிலும் அதிகபட்சமாக ஜூலை 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மட்டும் 11,637 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது….

மேலும் படிக்க

உலகின் முதல் ஹியூமனாய்ட் சோசியல் ரோபோக்களின் செய்தியாளர் சந்திப்பு..!!

அறிவியல் தொடர்ந்து முன்னேறி வருகிறது, குறிப்பாக ரோபோக்களின் உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) பொருத்தப்பட்ட ரோபோக்கள் பேசுவதைக் கேட்ட பிறகு, ஹாலிவுட்திரைப்படங்களின் கதைகள் உண்மையாகி இயந்திரங்கள் உலகை அடிமைப்படுத்தத் தொடங்குகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜெனீவாவில் நடைபெற்ற உலகின் முதல் ஹியூமனாய்ட் சோசியல் ரோபோக்களின் செய்தியாளர் சந்திப்பு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடந்த ‘சர்வதேச நலனுக்கான செயற்கை நுண்ணறிவு’ என்ற…

மேலும் படிக்க

“நான் பைத்தியக்காரத்தனமாகத் தெரிகிறேன்” வைரலாகும் எலான் மஸ்க்கின் குழந்தைப் பருவ புகைப்படம்..!!

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி தலைப்புச் செய்திகளில் வருவது சமீபகாலமாக வழக்கமாகிவிட்டது. சில சமயங்களில், சமூக ஊடகங்களில் சில பதிவுகளுக்கு அவர் என்ன ரியாக் ஷன் கொடுக்கப்போகிறார் என்பதை பார்ப்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளம் அவருக்கென்று உண்டு. அந்த வரிசையில் தற்போது “பேபி எலான்” என்ற தலைப்புடன் வெளியாகியுள்ள எலான் மஸ்க்கின் சிறுவயது புகைப்படத்திற்கு அவர் கொடுத்துள்ள எதிர்வினை இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. K10 என்ற பெயரில்…

மேலும் படிக்க

அப்பளம் போல் சரிந்த அடுக்குமாடி கட்டடம்..!!

வடகிழக்கு பெர்னாம்புகோ மாநிலம் ரெசிஃபி புறநகரில் 4 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு நேற்று காலை  காலை 6 மணி அளவில்  திடீரென இடிந்து அப்பளம் போல் சரிந்தது. இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் அங்கு தூங்கிக்கொண்டிருந்த 8 பேர்  உயிரிழந்தனர்.  இதில் இரு சிறுவர்களும் அடக்கம். கட்டிட இடிபாடுகளில் 5 பேர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ரெசிஃபி  நகரில் கடந்த சில…

மேலும் படிக்க

மணிப்பூரில் தொடரும் கலவரம்

மணிப்பூரில் மெஜாரிட்டியாக உள்ள மெய்தி சமூகத்திற்கும் மற்றும் பழங்குடி பிரிவினருக்கும் இடையே கடந்த மே மாதம் 3-ந்தேதி கலவரம் வெடித்தது. இந்த மோதலில் பொதுமக்களில் 120 பேர் உயிரிழந்தும், 3 ஆயிரம் பேர் காயமடைந்தும் உள்ளனர். இந்த கலவரம் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில், மக்கள் அச்சம் மற்றும் பதற்றத்துடனேயே உள்ளனர். இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் என அன்றாட…

மேலும் படிக்க

மெக்சிகோவில் 7 வயது முதலையை மணந்த மேயர்..!!

மெக்சிக்கோ நாட்டில் பூர்வகுடி மக்களிடையே முதலையை திருமணம் செய்யும் வழக்கம் 230 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. முதலையை பெண் கடவுளாக அவர்கள் நம்புகின்றனர். முதலையை திருமணம் செய்வதன் மூலம் நல்ல காரியம் நடக்கும் என்றும், தெய்வீக நிலைய அடையலாம் என அவர்கள் கருதுகின்றனர். இந்நிலையில்  சான் பெட்ரோ ஹுவாமெலூலா என்ற சிறிய  நகரின் மேயர் விக்டா் ஹியூகோ சோசா, முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டார். 7 வயதான அந்த முதலைக்கு குட்டி இளவரசி என பெயரிடப்பட்டுள்ளது….

மேலும் படிக்க

அமெரிக்காவில் ரூ.40 கோடி மோசடி செய்த இந்திய வக்கீல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் வடக்கு அண்டோவர் பகுதியை சேர்ந்தவர் அபிஜித் தாஸ் (வயது 50). இந்திய வம்சாவளியான இவர் அங்கு வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். அப்போது இவர் சிலரிடம் பணமோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் இவர் தன்னிடம் வழக்கு தாக்கல் செய்ய வந்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து 2.7 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.40 கோடி) தனது வங்கி கணக்கு மாற்றியது தெரிய வந்தது….

மேலும் படிக்க

அமெரிக்காவில் இனி பறக்கும் கார்களில் பயணிக்கலாம்..!!

சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது ட்ராபிக்கை பார்த்தவுடன் அப்படியே பறந்து சென்று விட ஒரு வாய்ப்பு கிடைக்காதா என பலர் யோசித்திருப்பர். இதற்கு எந்த நாட்டு வாகன ஓட்டியாக இருந்தாலும் அவருக்கு விதிவிலக்கு இல்லை. பலரின் இந்த Mind Voice அமெரிக்காவின் அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு கேட்டிருக்கும் போல, உடனே பறக்கும் காரை உருவாக்கிவிட்டார்கள். அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷனிடம்(FAA) அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பறக்கும் காருக்கு சட்டப்பூர்வ அனுமதி வேண்டியும் விண்ணப்பித்திருக்கிறது இந்நிலையில், அலெஃப் ஏரோநாட்டிக்ஸ்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram