செய்தி எழுதும் திறன்கொண்ட கூகுளின் ஏஐ..!!

கூகுள் நிறுவனம் ‘ஜெனிசிஸ்’ எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட புராடெக்டை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது நடப்பு நிகழ்வுகள் மற்றும் அது தொடர்புடைய தகவல்களை திரட்டி செய்திக் கட்டுரைகளாக உருவாக்கும் திறன் கொண்டதாம். அது குறித்து பார்ப்போம். டெக் உலகில் அனைவரையும் பேச வைத்துள்ளது ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவின் வரவு. சாட்ஜிபிடி தான் அதற்கான விதையை உலக அளவில் பரவலாக தூவியது. அதன் வழியில் கூகுள் தொடங்கி பல்வேறு நிறுவனங்கள் ஏஐ சாட்பாட்களை…

மேலும் படிக்க

ஆப்கனில் தலிபான்களுக்கு எதிராக பெண்கள் போராட்டம்

ஆப்கனில் அழகு நிலையங்களை பெண்கள் நடத்தக் கூடாது என்ற உத்தரவுக்கு எதிராக பெண்கள் பலரும் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தலிபான்கள் கடந்த மாதம் பெண்கள் அழகு நிலையங்களை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து காபூல் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்டு வந்த அழகு நிலையங்கள் மூடப்பட்டன. தலிபான்கள் உத்தரவால் ஏராளமான பெண்கள் வேலை இழந்தனர். இந்த நிலையில், தலிபான்களின் உத்தரவை எதிர்த்து பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். காபூல் உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள்…

மேலும் படிக்க

மனிதர்களின் வயதை குறைக்கும் வேதிக் கலவை..!!

மனிதர்களுக்கு வயதாவதை தடுக்கும் வேதிக் கலவையை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஹார்வர்ட் விஞ்ஞானி டேவிட் ஷின்கிளயர் தன் ட்விட்டர் பக்கத்தில், “மரபணு சிகிச்சை மூலம் வயதைக் குறைக்க முடியும் என்பதை எங்களது முந்தைய ஆய்வில் நிரூபித்தோம். வேதிக் கலவை மூலமும் வயதைக் குறைக்க முடியும் என்பதை இப்போது நிரூபித்துள்ளோம். முதற்கட்டமாக இந்த வேதிக்கலவை எலி மற்றும் குரங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப் பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில், மூளைத் திசுக்கள், கிட்னி, பார்வை…

மேலும் படிக்க

ஈரானில் மீண்டும் அமலானது ஹிஜாப் கெடுபிடி..!!

 ஈரானில் மீண்டும் ஹிஜாப் கெடுபிடி அமலாகியுள்ளது. இதனையடுத்து பெண்கள் தங்கள் முகம், தலையை முழுமையாக மறைக்கும்படி ஹிஜாப் அணிகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் சிறப்பு ரோந்துப் படையினர் தங்களின் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் மாஷா அமினி மரணத்துக்குப் பின்னர் வெடித்த ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்கள் சற்றே தளர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ஹிஜாப் கெடுபிடி வேகமெடுத்துள்ளது.  ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயம். பெண்கள் ஆடை அணியும்…

மேலும் படிக்க

எரிமலையில் சமைக்கப்பட்ட பீட்சா 

மத்திய அமெரிக்காவில் உள்ள சிறிய நாடு குவாத்தமாலா. இங்கு உள்ள சுழல்வடிவ எரிமைலை அடிக்கடி வெடித்து வருகிறது. இந்த எரிமைலையில் பீட்சா சமைத்து சாப்பிடும் வீடியோவை இணையத்தில் பெண் ஒருவர்  பகிர்ந்துள்ளார். குவாத்தமாலா சேர்ந்த  அலெக்ஸாண்ட்ரா ப்ளாட்ஜெட் என்ற பெண் பகிர்ந்துள்ள  வீடியோவில் அந்த எரிமலை கடைசியாக 2021ஆம் ஆண்டு வெடித்ததாக தெரிவித்துள்ளார். நல்ல சுவையான பீட்சா சாப்பிட வேண்டும் என்றால் குவாத்தமாலா எரிமலைக்கு வாருங்கள் என தனது சப்ஸ்கிரைபர்களை அவர்  கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் சுதாரித்த சில வாசகர்கள்…

மேலும் படிக்க

தென் கொரியாவில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

தென் கொரியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நோன்சான், யோங்ஜூ உள்ளிட்ட 13 நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. சூங்சாங் மாகாணத்தில் பல அணைகள் நிரம்பி வழிகின்றன. எனவே அங்குள்ள கோசன் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெள்ளப்பெருக்கால் செஜோங் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள், கட்டிடங்கள் மண்ணில் புதையுண்டன. இதில் 20 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான…

மேலும் படிக்க

சிறுவனை விஷம் வைத்து கொன்ற ஆசிரியருக்கு தூக்குத்தண்டனை

சீனாவின் ஹெனான் மாகாணம் ஜியான்சுவோ நகரில் உள்ள மழலையர் பள்ளியில் வான் யுன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்தார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு தன்னிடம் பயின்ற 25 மாணவர்களுக்கு விஷத்தன்மை வாய்ந்த சோடியம் நைட்ரைட் கலந்த உணவை கொடுத்துள்ளார். இதில் அந்த சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் வான் யுன்னை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கில் அந்த நாட்டின் கோர்ட்டு அவருக்கு 9…

மேலும் படிக்க

பால்பவுடரில் போதைப்பொருள் கலந்து தந்த பதின்ம வயது தாய் : அமெரிக்காவில் 9 மாதக் குழந்தை பரிதாப பலி..!!

அமெரிக்கவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் 17 வயது நிரம்பிய தாய் ஒருவர் தன் கைக்குழந்தைக்கு பால் பவுடருடன் போதைப் பொருளை சேர்த்துக் கொடுத்ததால் அந்தக் குழந்தை உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமிக்கு வயது 17 என்பதால் அவரின் அடையாளங்களை வெளியிடாத போலீஸ் தரப்பு நடந்த சம்பவத்தை மட்டும் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதியன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. காலஹான் எனும் பகுதியிலிருந்த அந்தச் சிறுமியின் வீட்டுக்குப் போலீஸார் சென்றபோது குழந்தை பேச்சுமூச்சு இல்லாமல்…

மேலும் படிக்க

பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் பயணம்..!!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டு செல்கிறார். அங்கு நாளை நடைபெறும் தேசிய தின விழாவில் பங்கேற்கிறார். அவரது இந்த பயணத்தின்போது, கடற்படைக்கு தேவையான 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை கொள்முதல் செய்வது, மும்பை கப்பல் கட்டும் தளத்தில் மேலும் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம்…

மேலும் படிக்க

‘ஐபோன்’ அசெம்ப்ளி ஆலையை வாங்க டாடா குழுமம் முடிவு..!!

 ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை இந்தியாவில் ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், விஸ்ட்ரான் ஆகிய மூன்று வெளிநாட்டு நிறுவனங்கள் அசெம்பிள் செய்கின்றன. டாடா குழுமம் இந்தியாவில் ஆப்பிள் போன்களை அசெம்பிள் செய்யும் ஆலை அமைக்க சமீபகாலமாக விருப்பம் தெரிவித்து வந்தது. இந்நிலையில், அக்குழுமம் விஸ்ட்ரான் நிறுவனத்தை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விஸ்ட்ரான் நிறுவனத்துடன் டாடா குழுமம்இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்றும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் விஸ்ட்ரான்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram