ஆப்கனிஸ்தான் : 3-ம் வகுப்புக்கு மேல் பெண் பிள்ளைகள் கல்வி கற்க தலிபான் தடை..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் மூன்றாம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்க தலிபான் அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் குறிப்பிட்ட சில மாகாணங்களில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளி செல்ல தலிபான் அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது என்று அப்போது…

மேலும் படிக்க

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவருக்கு உபசரிப்பு : ஒரே நாளில் சர்வதேச கவனம் பெற்ற மூதாட்டி..!!

தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டியவரின் பசியை போக்கிய அமெரிக்க மூதாட்டி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தில் உள்ள ப்ரூன்ஸ்விக் நகரத்தைச் சேர்ந்தவர் மார்ஜோரி பெர்கின்ஸ். 87 வயது மூதாட்டியான பெர்கின்ஸ் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஜூலை 26 அன்று பெர்கின்ஸ் தனது வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு 2 மணியளவில் இளைஞர் ஒருவர் பெர்கின்ஸின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். சத்தம்…

மேலும் படிக்க

சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சுற்றுலா செல்ல திட்டமா..?? குறுகிய கால விசா நிறுத்தப்படுவதாக அறிவிப்பு..!!

சுவிட்சர்லாந்து நாடு ஒரு சிறிய நாடாக இருந்தாலும் அது சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது.  வானை தொடும் ஆல்ப்ஸ் மற்றும்  பனிப்பாறைகள்,  அத்துடன்அழகிய நிலப்பரப்பு, பழைய அரண்மனைகள், தூய டர்க்கைஸ் ஏரிகள் மற்றும் ஒவ்வொரு திசையிலும் உள்ள கம்பீரமான மலைச் சிகரங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். ஐரோப்பாவின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியான ரைன் நீர்வீழ்ச்சி  சுவிட்சர்லாந்திற்கு வருபவர்களை ஈர்க்கும் இயற்கை அழகு என்றே கூறலாம். சர்வதேச சுற்றுலாத்தலமான சுவிட்சர்லாந்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். டெல்லியில் உள்ள…

மேலும் படிக்க

பெண்களுக்கு ‘ஹார்ட் எமோஜி’ அனுப்பினால் சிறை : சவுதி, குவைத்தில் புதிய சட்டம்..!!

சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு ஹார்ட் எமோஜி அனுப்பினால் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை சவுதி மற்றும் குவைத் அரசுகள் இயற்றியுள்ளன. வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நம் உணர்வுகளை கீபேட் வழியே வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு எமோஜிக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் முக்கியமானது ஹார்ட் எமோஜி. காதலர்கள், தம்பதிகள், நண்பர்கள் தங்களுக்குள் அன்பை பரிமாறிக் கொள்ள இந்த எமோஜியை பயன்படுத்துவதுண்டு. இதே போன்று, குவைத்தின் அண்டை நாடான சவுதியிலும் 2…

மேலும் படிக்க

சிறுவர்கள் 2 மணி நேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தலாம் : சீனாவில் புதிய கட்டுப்பாடு..!!

சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட்போனில் இணையம் பயன்படுத்தும் நேரத்தை நிர்ணயித்து சீன அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சீனாவின் சைபர்ஸ்பேஸ் அமைச்சகம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலான இணைய சேவைகளை பெற முடியாது. மேலும், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம்…

மேலும் படிக்க

‘வீகன்’ உணவு முறையை பிரச்சாரம் செய்து வந்த ‘இன்ஃப்ளூயன்சர்’ ஜானா மரணம்..!!

ரஷ்யாவைச் சேர்ந்த ஜானா சாம்சோநோவா ‘வீகன்’ உணவுகளை, குறிப்பாக பச்சை காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்வதை அவர் பிரச்சாரம் செய்து வந்தார்.இதன் அடிப்படையிலேயே அவர் சமூக வலைதளங்களில் புகழும் கிடைத்தது. இந்த நிலையில், உணவு உண்ணாமல் பட்டினியால் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மரணம், அவரை பின்பற்றிய அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் இறுதியாக பதிவிட்ட வீடியோவில், “ஒவ்வொரு நாளும் என் உடலும் மனமும் மாறுவதை நான் காண்கிறேன். தற்போது உங்கள் முன்…

மேலும் படிக்க

வெளிநாடுகளிடம் கையேந்துவதை பாகிஸ்தான் கைவிட வேண்டும் : ராணுவ தளபதி..!!

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதையடுத்து, அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு, வெளிநாட்டு தூதரகங்களின் எண்ணிக்கை குறைப்பு, உளவு அமைப்புகளுக்கான நிதி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், அண்மையில் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) பாகிஸ்தானுக்கு கடன் வழங்கி உள்ளது. சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளும் பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்துள்ளன. இந்நிலையில் இஸ்லாமாபாதிலுள்ள கானேவால் மாதிரி வேளாண் பண்ணை தொடக்க விழாவில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் பேசியதாவது…

மேலும் படிக்க

லண்டனில் ரூ.1,200 கோடிக்கு மாளிகை வாங்கிய இந்தியர்..!!

இந்திய கோடீஸ்வரர் ரவி ரூயா, லண்டனில் ரூ.1,200 கோடி மதிப்பில் மாளிகை ஒன்றை வாங்கியுள்ளார். ரஷ்ய முதலீட்டாளர் ஆன்டிரி கோஞ்சரென்கோவிடமிருந்து இந்த மாளிகையை அவர் வாங்கியுள்ளார். சமீப ஆண்டுகளில், லண்டனில் மிகப் பெரும் தொகையில் வாங்கப்பட்ட மாளிகையாக இது பார்க்கப்படுகிறது.இவர் ரஷ்ய அரசு நிறுவனமான காஸ்ப்ரோம் இன்வென்ஸ்ட் யூக் நிறுவன முன்னாள் துணை தலைமை நிர்வாக அதிகாரி. லண்டனில் 150 பார்க் சாலையில் ஹனோவர் லாட்ஜ் மாளிகை அமைந்துள்ளது. 1827-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மாளிகை தொடர்ந்து…

மேலும் படிக்க

பிரம்மோஸ் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியவில்லை ~ உக்ரைன் விமானப் படை வேதனை..!!

பிரம்மோஸ் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியவில்லை. அந்த ஏவுகணைகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி துல்லியமாக இலக்கை தாக்குகிறது என்று உக்ரைன் விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் என்ற சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இது ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக்கூடியது. இந்த ஏவுகணை இந்தியாவில் பிரம்மோஸ் என்றும் ரஷ்யாவில் ‘பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்’ என்றும் அழைக்கப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே 500 நாட்களுக்கும்…

மேலும் படிக்க

‘திருக்குர்ஆன்’ எரிப்பு விவகாரம் : ஈராக் தலைநகரில் தீவிரமடையும்போராட்டம்..!!

சுவீடன் நாட்டில் அமைதி முறையில் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு அடிப்படை உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் மதநிந்தனைத் தடைச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஆா்ப்பாட்டங்களின் போது எந்த மதத்துக்கு எதிரான செயல்களையும் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அரசின் அனுமதியுடன் சுவீடனில் நடைபெறும் ஆா்ப்பாட்டங்களின் போது முஸ்லிம்களின் புனித நூலாக கருதப்படும் திருக்குர்ஆன் எரிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் இஸ்லாமிய நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈராக்கிலிருந்து ஸ்வீடனில் தஞ்சமடைந்துள்ள சல்வான் மோமிகா என்ற கிறிஸ்தவரும், மற்றொரு இராக்கியரும் நேற்று முன்தினம்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram