“நானும் தமிழ் பேசுவேன், பாலக்காடு தமிழ்..!” என்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான விவேக் ராமசாமி..!! 

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். பிரதான எதிர்க் கட்சியான குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி (வயது 37) உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் உள்ள விவேக் ராமசாமி பல்வேறு தரப்பினரை சந்தித்து தேர்தலுக்கான ஆதரவை திரட்டி வருகிறார். இந்த நிலையில்,…

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டு சிங்கப்பூருக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்தியா வெற்றி..!!

சீனாவில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்திய அணி சிங்கப்பூர் அணியை எதிர்கொண்டது. இந்திய அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக முதல் பாதியில் 6 -0 என்ற கணக்கில் இந்தியா முனனிலை வகித்தது.மொத்தம் ஒன்பது வீரர்கள் கோல் அடித்து தங்கள் பங்களிப்பை வெளிப்படுத்தினர். முடிவில் இந்தியா அணி 16 -1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் நான்கு கோல்களை அடித்து அசத்தினார், அதே சமயம் மந்தீப் சிங்…

மேலும் படிக்க

இன்ஸ்டாவில் பகிரப்பட்ட ட்ரை ப்ரூட் பீட்சா வீடியோவுக்கு பார்வையாளர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்..!!

உர்மில் படேல் என்பவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ரொட்டியை இரு துண்டுகளாக வெட்டி அதன் மீது தக்காளி சாஸை ஊற்றுகிறார். பின்னர் முந்திரி, திராட்சை மற்றும் சீஸ் ஆகியவற்றை அதன் மேல் உற்றுகிறார். பின்னர் அது oven இல் வைத்து லேசாக சூடாக்கப்படுகிறது.இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில், பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். புதிய வகை உணவு செய்வது வரவேற்க தகுந்த செயல்தான். ஆனால் இப்படியா என…

மேலும் படிக்க

டீசல் என்ஜின் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்க மத்திய அரசு முன்மொழியவில்லை ~ நிதின் கட்கரி..!!

நாட்டில் டீசல் கார்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரை செய்துள்ளதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியானது. மேலும் நாட்டில் டீசல் வாகனங்களினால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருவதால் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க ஜிஎஸ்டி வரியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரைத்துள்ளார் என்றும் தகவல் வெளியானது….

மேலும் படிக்க

மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து உரையாடினார்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். அண்மையில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக இன்று படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அவ்வப்போது வேறு மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் நடிகர் ரஜினிகாந்த் பயணம் செய்வது வழக்கம். மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு…

மேலும் படிக்க

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது..!!

வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மராகேஷ் அருகே 18.5 கிலோமீட்டர் ஆழத்திற்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் 2 ஆயிரத்து 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம்…

மேலும் படிக்க

பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்..!!

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான குவாடரில் சீ கிங் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் மீண்டும் தரைக்கு திரும்பும் போது தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. அதில் 2 பேர் அதிகாரிகள் எனவும் ஒருவர் பணியாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது. NEWS EDITOR :…

மேலும் படிக்க

தீவிரவாத தாக்குதல்களில் 83% அதிகரிப்பு : பாகிஸ்தான்..!!

பாகிஸ்தானில் வடமேற்கு, தென்மேற்கு பகுதிகளில் இடைவிடாது அதிகரித்து வரும் தாக்குதல்களால் பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. அந்த நாட்டின் பிரபல சிந்தனை அமைப்பு வெளியிட்ட மாதாந்திர தரவுகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.இஸ்லாமாபாத் நகரைத் தளமாகக் கொண்டு செயல்படும் ‘பாகிஸ்தான் மோதல் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனம் (பிஐசிஎஸ்எஸ்)’ வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 99 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்ாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 தற்கொலைப் படைத் தாக்குதல்கள் அடங்கும்….

மேலும் படிக்க

அமெரிக்கா : மாவி தீவில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் இன்னும் 385 பேரைக் காணவில்லை..!!

அமெரிக்காவில் உள்ள மாவி தீவில் கடந்த ஒரு மாதமாக காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இதில் லஹேனா நகரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. லஹேனாவில் 13,000 கட்டடங்கள் சேதமடைந்தன. மேற்கு மாவி பகுதியில் 2,200 கட்டடங்கள் சேதமடைந்தன. “மாவி தீவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள லஹேனா, புலேஹு மற்றும் மத்தியப் பகுதிகளில் காணாமல் போனதாக 388 பேரின் பெயா்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. எனினும், அந்தப் பட்டியலில் இருந்த 245 போ் இருக்கும் இடம்…

மேலும் படிக்க

சிங்கப்பூர் : அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த ‘தர்மன் சண்முகரத்னம்’ அமோக வெற்றி பெற்றுள்ளார்..!!

1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது தாத்தா இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற கிராமத்தை சேர்ந்தவர். தர்மனின் தந்தை கே. சண்முகரத்னம் மருத்துவப் பேராசிரியர். தர்மன் சண்முகரத்னம் ஜப்பானிய-சீன வழக்கறிஞரான ஜேன் யுமிக்கோ இட்டோகி என்பவரைத் திருமணம் புரிந்தார்.சிங்கப்பூரில் ஆங்கிலோ-சீனக் கல்லூரியில் கல்வி பயின்ற தர்மன், லண்டன் கேம்பிரிட்ஜ் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களில் பொருளாதாரம் பயின்றார். ஒரு பொருளாதார நிபுணரான தர்மன், சிங்கப்பூருக்கான அரசு சேவையில், முக்கியமாக பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளுடன்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram