Today

ஆப்பிள் நிறுவனம் : கூகுள் தேடுபொறி தளத்துக்குப் போட்டியாக ஒரு புதிய தேடுபொறி தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது..!!

உலகம் முழுவதும் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுவது கூகுள் தேடுபொறி தளம். வேறு பல தேடுபொறி தளங்கள் இருந்தாலும் கூகுள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆப்பிளின் ஐபோன், மேக் உள்ளிட்ட சாதனங்களில் வழக்கமான தேடுபொறியாக கூகுள் இருந்து வந்துள்ளது. இதற்காக கூகுள் பெரும் தொகையுடன் ஆப்பிள் நிறுவனத்துடன் பல ஆண்டுகளாக ஒப்பந்தத்தில் இருந்து வருகிறது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக ஒரு தேடுபொறி தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் மைக்ரோசாப்ட் மற்றும் டக்டக்கோ (DuckDuckGo) என்ற…

மேலும் படிக்க

அமெரிக்காவில் நகைக்கடை பாதுகாப்பு பெட்டகத்திற்குள் சிக்கிய வாடிக்கையாளர்..!!

நியூயார்க் நகரத்தின் டயமண்ட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகைக் கடையில்,  23 வயதுடைய வாடிக்கையாளர் ஒருவர் அங்குள்ள பாதுகாப்பு பெட்டகத்தில்  இரவு சுமார் 10 மணி நேரம் சிக்கிக் கொண்டார். அக்டோபர் 24 அன்று மாலை 7 மணியளவில் 580 ஐந்தாவது அவென்யூ கட்டிடத்திற்குள் சிக்கினார்.  இறுதியில் அக்டோபர் 25 ஆம் தேதி காலை 6 மணியளவில் அவர் மீட்கப்பட்டார். இந்த நகைக்கடை, வாடிக்கையாளர்களுக்காக பாதுகாப்பு பெட்டக சேவையையும் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.  அந்த வகையில் நகைக்கடையின்…

மேலும் படிக்க

கர்நாடகா : மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதலாம்..!!

கடந்தாண்டு கர்நாடகாவில் அரசுப் பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால், மாநிலம் முழுவதும் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. சில மாணவர்கள் காவித் துண்டு அணிந்து கொண்டு ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடகா முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்ததை அடுத்து, கல்வி நிறுவனங்களில் சீருடையை தவிர பிற ஆடைகள் அணியக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், முதலமைச்சர் சித்தராமையா தலைமையில்…

மேலும் படிக்க

பெர்லினில் உள்ள யூத தேவாலயம் ஒன்றில் நேற்று பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது..!!

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 13வது நாளாக இன்றும் வன்முறை நீடித்து வருகிறது.காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனி தலைநகரான பெர்லினில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கலவரத்தின்போது போலீஸாருக்கும், இஸ்லாமியர்களுக்கும்…

மேலும் படிக்க

இஸ்ரேலில் மீட்கப்பட்ட 17 தமிழர்கள் சென்னை வந்தனர்..!!

இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்ட 5சிறுவர்கள் உட்பட 23 தமிழர்கள் நேற்றிரவு டெல்லி வந்தனர். அவர்களில் 17 பேர் சென்னைக்கும், 4 பேர் கோவைக்கும்,  2 பேர் மதுரைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.சென்னையை சேர்ந்தவர்கள் இன்று அதிகாலை ஏர் இந்தியா விமானத்தில் டெல்லியில்  இருந்து புறப்பட்டு  சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு அவர்களை எம்.பி கலாநிதி வீராசாமி வரவேற்றார். இஸ்ரேல் – பாலஸ்தீன போர் தீவிரமடைந்த நிலையில்,  ஒன்றிய அரசு 5…

மேலும் படிக்க

காசாவில் இஸ்ரேல் ராணுவத்தின் குண்டுமழை தொடரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு பயணம்..!!

இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் 11 நாளாக தொடர்கிறது.  காஸா மீது முப்படை தாக்குதலுக்கு தயாராகியுள்ள இஸ்ரேல் ராணுவம், தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது.  இஸ்ரேலிய தாக்குதல்களில் காஸாவில் இதுவரை 2 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டதாக பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.நாளுக்கு நாள் போர் தீவிரமாகி வரும் நிலையில்,  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.  அப்போது அவர் ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவதற்கு…

மேலும் படிக்க

உலக உணவு தினம் இன்று..!!

ஆண்டுதோறும் அக்டோபர் 16 உலக உணவு தினமாக கொண்டாடப்படுகிறது.  ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஸ்தாபக நாள் இன்று.  இந்த நாளைக் கொண்டாடுவதன் நோக்கம் பசியில் இருந்து உலக மக்களை விடுவிப்பதாகும். உலகில் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கவில்லை என்றாலும், உலக உணவு தினம் என்பது அதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இதன் முக்கிய நோக்கம் ஆகும். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு…

மேலும் படிக்க

அமெரிக்காவில் பாலஸ்தீன குழந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!

சிகாகோவில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இல்லினாய்ஸ், ப்ளைன்ஃபீல்ட் டவுன்ஷிப்பில் சனிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்தது.  குற்றம் சாட்டப்பட்டவர்,  ஒரு பாலஸ்தீனிய முஸ்லீம் பெண்ணையும் அவரது  6 வயது குழந்தையை 26 முறை கத்தியால் குத்தியதாகவும்,  மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.  இருப்பினும் அவரது தாயார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் உயிர் பிழைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  அமெரிக்க இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில் (CAIR) சிகாகோ அலுவலகத்தின் தலைவர் அஹ்மத் ரெஹாப்,  இந்த…

மேலும் படிக்க

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் : மீண்டும் முதலிடத்தில் முகேஷ் அம்பானி..!!

போர்ப்ஸ் இதழ் இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 92 பில்லியன் டாலர் (ரூ.7.63 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முதல் இடம் பிடித்துள்ளார். கவுதம் அதானி இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு 68 பில்லியன் டாலராக (ரூ.5.64 லட்சம் கோடி) உள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி சொத்து மதிப்பு சரிந்துள்ளதாக போர்ப்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம்…

மேலும் படிக்க

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இன்று 8-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது..!!

பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என பொதுமக்களுக்கு இஸ்ரேல் கெடு விடுத்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், காசா மீது தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும், எனவே காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது….

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram