ஆதித்யா எல்1 விண்கலம் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ எனப்படும் எல் 1 பகுதியை அடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது..!!
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ எனும் இடத்தில் இந்த விண்கலத்தை நிலைநிறுத்துவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆதித்யா எல்1 விண்கலம் அதன் எல்1 எனும் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆதித்யா எல்1 விண்கலம், அதன் இலக்கான ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ என்ற பகுதியை இன்று (ஜனவரி 6) எட்டியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக…