மீதமிருந்த ஒரு சாண்ட்விச்சை சாப்பிட்டதால் பணிநீக்கம்..!!
லண்டன், ஃபின்ஸ்பரி சர்க்கஸ் பகுதியில் டென்ஷ்ரிஸ் சொலிஸிட்டர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஈக்வடார் நாட்டை சேர்ந்த கேப்ரியல்லா ரோட்ரிகுயஸ் என்ற பெண், 2 ஆண்டுகளாக தூய்மைப்பணியாளராக வேலை செய்து வந்தார். இதனிடையே இந்த நிறுவனத்தில் அலுவலக ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டவர்களுக்கு சாண்ட்விச் வழங்கப்பட்டது.இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாண்ட்விட்ச்-ஐ சாப்பிட்டுவிட்டு, மீதமுள்ளதை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். தூய்மைப்பணியாளரான கேப்ரியல்லா, அங்கு மீதம் இருந்த ஒரு சாண்ட்விச்சை எடுத்து சாப்பிட்டு…