காஸாவில் பள்ளி மீது தாக்குதல்..!!
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இந்நிலையில், மத்திய காஸாவின் நுசீரத்தில் அமைந்துள்ள அல்-ஜாவ்னி பள்ளி மீது நேற்று (ஜூலை 6) இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என பாலஸ்தீன சுகாதாரத்துறை…