பாடகர் ‘மனோ’வின் மகன்கள் மீது சிறுவர்களை தாக்கியதாக வழக்குப் பதிவு..!!

பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் ரஃபி மதுபோதையில் சிறார்களைத் தாக்கியதாக கூறப்பட்டது. மனோவின் மகன் உள்பட அவரது நண்பர்கள் சிலர் சென்னை வளசரவாக்கத்தில் உணவகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு கிருபாகரன் என்ற , 16 வயது சிறுவனையும் மதுபோதையில் சரமாரியாகத் தாக்கியதாகவும், இதில் 16 வயது சிறுவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் மனோவின் வீட்டிற்கு சென்று அவரது மகனிடம்…

மேலும் படிக்க

சீனாவில் அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வரம்பை உயா்த்துவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது..!!

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள்தொகை சரிந்து வருகிறது. அதே நேரத்தில் அங்கு வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு 5-ல் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக உள்ளார். இதன் காரணமாக அங்கு ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த சூழலில், அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை அதிகரிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஆண்களுக்கு…

மேலும் படிக்க

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு இடியுடன் மழை வெளுக்கும்..!!

மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதியாக நிலவுகிறது. மேலும் இது வடக்கு திசையில் நகர்ந்து, 8-ஆம் தேதி வாக்கில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

மேலும் படிக்க

 சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ‘மொயின் அலி’..!!

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 37 வயதான மொயீன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இதையடுத்து அவர் ஓய்வு பெற முடிவு செய்தார். 2014ல் சர்வதேச அரங்கில் அறிமுகமான பிறகு, மொயீன் அலி 68 டெஸ்ட், 138 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடினார். அவர் இங்கிலாந்துக்காக 6678 ரன்கள், 8 சதங்கள், 28 அரைசதங்கள் மற்றும் அனைத்து…

மேலும் படிக்க

நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், திடீர் திருப்பமாக அதிர்ச்சியூட்டும் தகவல்..!!

மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோரின் தவறான நடத்தை பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இந்திய திரையுலகத்தை உலுக்கியுள்ளது. இந்த அறிக்கையின் தாக்கத்தை தொடர்ந்து, பல திரையுலகிலும் இதுபோன்ற கமிட்டிகள் அமைக்கபட வேண்டும் எனவும், மலையாளம் மட்டுமின்றி மற்ற திரையுலகில் உள்ள பாலியல் குற்றச்சாட்டுகளும் வெளிவருகின்றன. இதையடுத்து பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பல நடிகைகள்…

மேலும் படிக்க

ஆப்பிள் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் இந்த ஆண்டு புதிய உச்சத்தை எட்டும்..!!

வன்பொருள் மற்றும் சேவைப் பிரிவில் ஏற்பட்ட வளர்ச்சியால் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி டாலர் என்ற உச்சத்தை இந்த ஆண்டில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கவுன்டர் பாயின்ட் (counter point) என்ற ஆராய்ச்சி நிறுவனம், தொழில்நுட்பச் சந்தை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ஆப்பிள் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் குறித்த ஆய்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.அதில் இந்த ஆண்டில் மட்டும் ஆப்பிள் நிறுவன…

மேலும் படிக்க

டெல்லி மாநகரப் பேருந்தில் பயணம் செய்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ‘ராகுல் காந்தி’..!!

மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, டெல்லி சரோஜினி நகர் பேருந்து பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், மார்ஷல்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார. இது தொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், “நமது ஜனநாயக சமூகத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் ஒவ்வொரு பிரிவினரையும் ராகுல் காந்தி சந்தித்து அவர்களுக்காக குரல் எழுப்பி வருகிறார்” என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

பிரதமர் நரேந்திர மோடியுடனான இந்த சந்திப்பு முக்கியமானது ~ உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..!!

பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கைகொடுத்து, ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் போர் சூழல் குறித்த புகைப்பட காட்சிகளை மோடி பார்வையிட்டார். முன்னதாக கீவ் நகரில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவிடத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.இந்த சந்திப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்தியா – உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மற்றும் உறவுகளை வலுப்படுத்த…

மேலும் படிக்க

யூடியூப் செனல் ஆரம்பித்த ரொனால்டோ..!! 90 நிமிடங்களில் 1 மில்லியன் Subscriber..!!

கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலமாகியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள் கொண்ட விளையாட்டு வீரர் என்ற சாதனையை அவரிடம்தான் உள்ளது. தன்னுடைய கால்பந்து வாழ்க்கையின் கடைசிகாலத்தில் இருக்கிறார் ரொனால்டோ. இந்நிலையில் இப்போது அவர் யுடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதன் மூலம் அவர் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கவுள்ளார்.

மேலும் படிக்க

துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும்..!!

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘லக்கி பாஸ்கர்’. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, துல்கருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர்.இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகும் இத்திரைப்படம் செப்.7ஆம் தேதி வெளியாகும்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram