நைஜீரியா ~ எண்ணெய் டேங்கர் வெடித்ததில் 94 பேர் உடல் கருகி பலி..!!
நைஜீரியாவின் ஜிகாவா மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் சாலையில் எரிபொருள் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. அந்த டேங்கர் லாரி திடீரென சாலையில் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.அப்போது லாரியில் இருந்த எரிபொருள் சாலையில் ஆறு போல் ஓடியது. அந்த சமயத்தில் டேங்கர் லாரி திடீரென வெடித்து சிதறியது. இதில் டேங்கர் லாரியின் அருகே இருந்தவர்கள் உடல் கருகி பலியாகினா். சம்பவ இடத்திலேயே 94 பேர் உயிரிழந்தனா்.