டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோரக் காவல்படை விமானம் மோதியதில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்தது..!!
ஜப்பான் ஏர்லைன்ஸ் 516 என்ற விமானம் 379 பயணிகளுடன் டோக்கியோவின் ஹனேடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த விமானம் டோக்கியோவில் தரையிறங்கிய போது கடற்படையின் விமானத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் பயங்கரமாக தீப்பற்றி எரிந்துள்ளது.உடனடியாக விமான நிலையத்தின் தீயணைப்பு வீரர்களும், மீட்புப் படையினரும் விரைந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். ஜப்பான் கடற்படையின் எம்ஏ-722 என்ற சிறிய ரக விமானம் மோதியிருக்கக்கூடும் என்ற முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.