தனது பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக தன்னை கொடுமைப்படுத்துவதாக மூதாட்டி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு..!!

திருப்பூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரா.  இவர்தனது கணவர் முத்துசாமி இறந்த நிலையில் தனது மகன் சுரேஷ்குமார் மற்றும் மருமகள் ரூபினி ஆகியோருடன் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார்.  உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மூதாட்டியின் மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கடந்த 6 மாத காலமாக மகன் சுரேஷ்குமார் மற்றும் மருமகள் ரூபினி தனது பெயரில் உள்ள…

மேலும் படிக்க

ஒரே நாளில் 7,500 ஓட்டல் முன்பதிவு : மாலத்தீவு..!!

 மாலத்தீவு செல்லும் விமானங்களில் 2,300 டிக்கெட்டுகளையும் இந்திய சுற்றுலா பயணிகள் ரத்து செய்தனர். அதோடு மாலத்தீவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரபல நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகர் சல்மான் கான், “பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவின் அழகான, தூய்மையான, அற்புதமான கடற்கரையில் இருப்பதை பார்த்து மகிழ்கிறேன். இந்தியர்கள் லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்ல வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார். நடிகர் அக்சய் குமார், “மாலத்தீவின் அரசியல் தலைவர்கள் இந்தியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இருந்தே மாலத்தீவுக்கு அதிக…

மேலும் படிக்க

‘கேப்டன் விஜயகாந்த்’-ன் இல்லத்திற்கு நடிகர் சூரி  நேரில் சென்று, அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்..!!

விஜயகாந்த் குடும்பத்திற்கும் தனது ஆறுதலை அவர் கூறினார்.  பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்த சூரி,  “கேப்டன் அவர்களைப் பற்றி அவர் செய்த பல நல்ல விஷயங்களையும் எல்லோரும் கூறிவிட்டனர். அவரைப் பற்றி நான் புதிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை.நான் படப்பிடிப்பில் அப்போது இருந்ததால் வர முடியவில்லை. ஆரம்ப காலக்கட்டத்தில் கேப்டனின் ’தவசி’,  ‘பெரியண்ணா’ போன்ற படங்களில் நான் வேலை செய்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது.  காலம் முழுவதும் மக்கள் மனதில் கேப்டன் பெயர் நிச்சயம் இருக்கும்.  அங்கு…

மேலும் படிக்க

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை..!!

நாளை (ஜன. 09) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி,  திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

உலக முதலீட்டாளர் மாநாட்டில் இன்று 37 நிறுவனங்களுடன் மொத்தமாக ரூ.1,80,000 கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது..!!

ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் கூடுதலாக 6,180 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. மேலும் கோத்ரேஜ் நிறுவனத்தின் லைட் ஹவுஸ் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.குவால்காம் நிறுவனத்துடன் 177 கோடி ரூபாய் மதிப்பிலும்,  ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்துடன் 5,600 கோடி ரூபாய் மதிப்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.  இதே போல் தமிழ்நாட்டில் டாடா பவர் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 55 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உலகத்…

மேலும் படிக்க

தங்கம் விலை குறைந்தது..!!

தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,860-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,880-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.50,640-க்கு விற்பனையாகிறது.

மேலும் படிக்க

மாணவர்களின் பசி தீர்க்கும் செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது..!!

செங்கோட்டையில் உள்ள எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளில் சுமார் 950 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.  இவர்களில் சிலர் காலையில் உணவு சாப்பிடாமல் வருவதை அறிந்த ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் இந்த தகவலை தெரிவித்து இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார்கள்.  அதன்படி தேவையான மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது என்றும் இதற்கான செலவுகளை ஆசிரியர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வது என்றும் தீர்மானித்தார்கள். இதன்படி கடந்த ஒன்றரை மாதங்களாக மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.  சுமார் 100…

மேலும் படிக்க

‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படமும், ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படமும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகிறது..!!

அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன்,  சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.  இத்திரைப்படத்தை நீலம் புரோடக்‌ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார்.  கீர்த்தி பாண்டியன்,  பிருத்விராஜ், பகவதி பெருமாள்,  இளங்கோ குமாரவேல்,  லிசி அந்தோணி,  திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில்,  கோகுல் இயக்கத்தில் நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படமும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகிறது. சத்யராஜ்,  தலைவாசல் விஜய் உட்பட பலர் இத்திரைப்படத்தில்…

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது..!!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை விநியோகம் செய்யப்படவுள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி ஜனவரி 9-ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது.டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு ரேஷன் கடைக்குச் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல், 13-ம் தேதிக்குள் பரிசு தொகுப்பை பெற முடியாதவர்கள், 14-ம் தேதியும் பரிசத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜன.1-ம் தேதி, பொங்கல் தொகுப்பில் தலா ஒரு கிலோ அரிசி,…

மேலும் படிக்க

80 வயது நிரம்பிய ஒரு பாட்டி தனது பேத்தியுடன் கடலில் சர்ஃப்பிங் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..!!

கடலில் குளிப்பது, கடற்கரையில் காலை நனைப்பது, அந்த வாசத்தில் அமர்ந்து இருப்பது ஒரு வகையினருக்கு பிடிக்குமென்றால் அதில் இறங்கி நீச்சலடிப்பது, பல்வேறு ரைடு போவது, ஸ்நோர்கெலிங் செய்வது, சர்ஃபிங் செய்வது போன்ற நீர் விளையாட்டுகள் சாகச விரும்பிகளின் தேர்வாகும்.இந்த மகிழ்ச்சியான இடத்தை என் பாட்டியுடன் பகிர்ந்து கொள்வது மிகவும் சிறப்பு” என்ற மேற்கோளுடன் தனது பாட்டி கடலில் முதன்முறையான தனது 80 வயதில் சர்ஃப்பிங் செய்யும் வீடியோவை அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  தனது…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram