பூண்டு விலை அதிகரித்து கிலோ ரூ.520 வரை விற்பனை..!!
தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு விளைவிக்கப்படுகிறது. அதேபோல, வட மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டுகளைக் கொண்டே, மக்களின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் பூண்டு மொத்த விற்பனை மையமாக செவ்வாய்ப் பேட்டை பால் மார்க்கெட், லீ பஜார் உள்ளது. இங்கிருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பூண்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.சேலத்தைச் சேர்ந்த பூண்டு வியாபாரிகள் கூறியது:கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பூண்டு சிறிய ரகம் கிலோ ரூ.180…