ஸ்பைஸ்ஜெட் : 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்..!!
நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஸ்பைஸ்ஜெட் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக 1,400 பணியாளர்களை நீக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. மொத்தம் 9,000 ஊழியர்கள் அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் அதில் சுமார் 15 சதவீத பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 12 மில்லியன் டாலரை அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.100 கோடியை மிச்சப்படுத்த முடிவு செய்துள்ளது.