லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சென்னையில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்தனர்..!!

லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள், வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக, ஜெர்மனி பிராங்க் ஃபார்ட் நகரில் இருந்து, சென்னை வரும் விமானமும், சென்னையில் இருந்து பிராங்க் ஃபார்ட் செல்லும் விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டது.  இதனால் சென்னையில் இருந்து அமெரிக்கா,  கனடா,  ஜெர்மனி செல்லும்  பயணிகள் தவித்து வருகின்றனர்.ஜெர்மனியில் உள்ள,  லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள்,  ஊதிய உயர்வு கேட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், பல்வேறு நாடுகளுக்கு…

மேலும் படிக்க

ஷம்பு எல்லையில் போராடும் விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன..!!

அரசு முன் விவசாயிகள் 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அதில் 10 அம்ச கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன.  மூன்று கோரிக்கைகள் தொடர்பாக குழப்ப நிலை உள்ளது.  மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான 5வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை சண்டிகரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய வேளாண்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா,  5வது சுற்று பேச்சுவார்த்தைக்கு அமைதியை பேணுவது முக்கியம் என தெரிவித்தார்.விவசாயிகள் போராட்டம் 9-வது நாளாக நீடிக்கிறது. மத்திய அரசுடனான 4 சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த…

மேலும் படிக்க

பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி வெறுங்கால்களுடன் மலை ஏறும் 60 வயது முதியவர..!!

வயது என்பது எதற்கும் தடையில்லை என்பதை பல முதியவர்கள் பல தருணங்களில் அவ்வபோது நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் விடாமுயற்சியும், துணிச்சலும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை அலைன்ராபர்ட் என்ற முதியவர் நிரூபித்துள்ளார். 60 வயதான இவர் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி மலை ஏறும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைராலாகி வருகிறது.இவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள வெர்டன் மலையில் வெறுங்கால்களுடன் மலை ஏறும் வீடியோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ 67 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வயாளர்களை கடந்துள்ளது….

மேலும் படிக்க

தொடரும் வினோத உணவு கலவைகள்..!!

குலோப் ஜாமுன் பர்கர்,  குலோப் ஜாமுன் சமோசா,  ஐஸ்கிரீம் மசாலா தோசை,   ஐஸ்கிரீம் நூடுல்ஸ் ஆகியவை இதில் குறிப்பிடதக்கவை. இதனைத் தொடர்ந்து இட்லி ஐஸ்கிரீம் கலவை அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  அந்த வகையில் தற்போது சமோசா மஞ்சூரியன் உணவுக் கலவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாகவே சமோசா மற்றும் மஞ்சூரியன் மக்களுக்கு பிடித்த ஒன்றாகும்.  ஆனால், சாலையோர வியாபாரி ஒருவர் இதை இரண்டையும் கலந்து ஒரு புதுவித உணவுக்கலவையை வழங்குகிறார்.  இந்த வீடியோவை சாய் என்பவர் தனது இன்ஸ்டாகிராம்…

மேலும் படிக்க

தமிழ் சினிமாவில் காதல் ‘வைரஸ்’..!!

‘மௌன ராகம்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘மின்னலே’, ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘3’, ‘காதலன்’, ‘யாரடி நீ மோகினி’, ‘மயக்கம் என்ன’, ‘ரெமோ’, ‘சிவாஜி’, ‘குட்டி’ என அடிஷ்னல் சீட் வரை ‘ஸ்டாக்கி’ படங்களின் பட்டியல் நீளும். செல்வராகவனின் படங்கள் இதனை தெரிந்தோ, தெரியாமலோ ஊக்குவித்தே வந்துள்ளன. ‘7ஜி ரெயின்போ காலனி’ காதல் என்ற போர்வைக்குள் ஒளித்துவைக்கப்பட்ட ஸ்டாக்கிங் கதைக்களம் கொண்ட திரைப்படம்.‘காதல் கொண்டேன்’ படத்தையும் இ்ந்த லிஸ்டில் தாராளமாக சேர்த்துக்கொள்ள முடியும். போலவே ‘மயக்கம் என்ன’ சொல்லவே…

மேலும் படிக்க

தங்கம் விலை குறைந்தது..!!

கடந்த 12-ம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.46,640 – ஆகஇருந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக விலை குறைந்தது. இதன்படி, நேற்றும் பவுனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.45,920-க்கு விற்பனையானது.கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,740-க்குவிற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.49,680-க்குவிற்கப்பட்டது. அதேநேரம், வெள்ளி கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.76-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.500 அதிகரித்து ரூ.76,000-க்கும் விற்பனையானது.

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!! 

பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் Rhodaminbe-B எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன்படி Rhodamine-B எனப்படும் செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல்,  விற்பனை செய்தல்,  திருமண விழாக்கள் மற்றும் பொது…

மேலும் படிக்க

சென்னை மெரினா கடற்கரை முதல், ஜெமினி வரையிலான கதீட்ரல் சாலையில்  2 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல்..!!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த மலர் கண்காட்சிக்காக கிருஷ்ணகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அரிய வகை மலர்கள் எடுத்துவரப்பட்டுள்ளன. 10 நாட்களுக்கு இந்த மலர் கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை மறுநாள் (பிப். 20) முடிவடைகிறது.இந்த கண்காட்சிக்கு, வாகனங்களை கொண்டு வருபவர்கள் செம்மொழி பூங்காவுக்கு எதிர்ப்புறம், வாகன நிறுத்தும் இடத்தை ஏற்பாடு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் செம்மொழிப் பூங்காவை நோக்கி…

மேலும் படிக்க

வித்தியாசமாக ரொட்டியை கழுவி சாப்பிடும் பெண்..!!

பொதுவாக இரவு உணவில் மீதம் உள்ள உணவை மறுநாள் மீண்டும் சூடுபடுத்தி உண்ணுவது பொதுமக்களின் பொதுவான நடைமுறையில் இயல்பாக இருந்து வருகிறது. அந்த வகையில்,  பாகிஸ்தான் நாட்டின் கராச்சியைச் சேர்ந்த அலிஷே என்ற பெண் மீதமிருந்த இரவு உணவான நானைக் தண்ணீரில் கழுவி மீண்டும் சூடுபடுத்தினார்.அவ்வாறு தண்ணீரில் கழுவி சூடுபடுத்தினால்,  மென்மையாக இருக்கும் என அந்த பெண் தெரிவித்தார்.  இது குறித்து அந்த பெண் ஒரு வீடியோ பதிவை கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி பதிவிட்டார். …

மேலும் படிக்க

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது..!!

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நாளை (பிப்.15) தொடங்குகிறது.  10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தொடங்க இருக்கிற தேர்வு மார்ச் 13-ம் தேதி நிறைவடைகிறது.  அதேபோல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ம் தேதி நிறைவடைகிறது.இந்த தேர்வினை 36 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.  இந்த தேர்விற்காக நாடு முழுவதும் 877 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த தேர்வு காலை 10:30 மணிக்கு தொடங்கி மதியம் 1. 30 மணிக்கு நிறைவடையும்.

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram