14 வயது ‘குடிசை பகுதி இளவரசி’க்கு HOLLYWOOD OFFER

மும்பையின் தாராவி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி மலீஷா கர்வா “பார்ஸ்ட் எசென்ஷியல்ஸ்” எனும் ஆடம்பர அழகு சாதன பிராண்டின் விளம்பர தூதராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அதன்படி “தி யுவி கலெக்ஷன்” எனும் பெயரில் விளம்பரங்களில் நடிக்க உள்ளார். மேலும், இந்த இளம் பெண்ணுக்கு இரண்டு ஹாலிவுட் படங்களில் இருந்து வாய்ப்புகள் வந்துள்ளன. ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாப்மேன் மூலம் கடந்த 2020 ஆண்டு கண்டறியப்பட்டவர் தான் மலீஷா கர்வா. பின் மலீஷா கர்வா-வை…

மேலும் படிக்க

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதுபற்றி அக்கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளரான லல்லன் குமார் என்பவருடைய தொலைபேசிக்கு கடந்த மார்ச் 25-ந்தேதி அழைப்பு ஒன்று வந்து உள்ளது. அதனை எடுத்து பேசியபோது, ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்து அந்த நபர் பேசியுள்ளார். இதுதவிர, தனது பெயர் மனோஜ் ராய் என்றும் உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகரை சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார். இதுபற்றி லல்லன் குமார், லக்னோ…

மேலும் படிக்க

2,000 ரூபாய் நோட்டுகளை நாளை முதல் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்

செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி கடந்த 2 தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வருகிற 23-ந் தேதி (நாளை) முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்வதற்கு வரும் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கடைசி…

மேலும் படிக்க

நடிகர் சரத்பாபு காலமானார் !

நடிகர் சரத்பாபு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் இந்த செய்தியை அவரது தங்கை மறுத்தார். இந்த நிலையில் ஏ.ஐ.ஜி.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானதாக குடும்பத்தினர் அறிவித்தனர். மூத்த நடிகர் சரத்பாபு காலமானார். அவருக்கு வயது 71. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள…

மேலும் படிக்க

சித்தராமையாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கர்நாடக தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை முடிவில் கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, கர்நாடகாவில் பெங்களூருவில் முதல்-மந்திரியாக சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் ஆகியோர் முறைப்படி இன்று பதவியேற்று கொண்டனர். இதற்காக…

மேலும் படிக்க

2000Rs BANNED | 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கம்

ரூ.2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2023 செப்டம்பர் 30 தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவில் இனி ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது. வங்கி சேவையை பயன்படுத்தும் பொது மக்களிடம் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வழங்க வேண்டாம் என்று…

மேலும் படிக்க

சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா ஆகியோர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து, கர்நாடக முதல்-மந்திரி பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை | NO BAN FOR JALLIKATTU

ஜல்லிகட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன இதற்கிடையே கோர்ட்டு உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு இடையில் தடை ஏற்பட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராடினர். இதனையடுத்து தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜல்லிகட்டு போட்டிகளை…

மேலும் படிக்க

கொடைக்கானல் மலர் கண்காட்சி, கோடை விழா மே 26-ல் STARTS

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 26-ல் தொடங்கி ஜூன் 2 வரை நடைபெற உள்ளது என வருவாய் கோட்டாட்சியர் ரா.ராஜா தெரிவித்துள்ளார். கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 60-வது மலர் கண்காட்சி மே 26-ல் தொடங்கி மே 28 வரை நடைபெற உள்ளது. இதே போல், கோடை விழா மே 26-ல் தொடங்கி ஜூன் 2 வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. மலர் கண்காட்சியை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் பிரையன்ட்…

மேலும் படிக்க

டெல்லியில் CONGRESS தொண்டர்கள் கொண்டாட்டம் –

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 115 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 73 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிப்பதை அக்கட்சியின் தொண்டர்கள் தற்போதே கொண்டாடி வருகின்றனர். இதனிடையே காங்கிரஸ் முன்னிலை வகிப்பதை அடுத்து பிரியங்கா காந்தி…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram