இனி இலங்கைக்கு சொகுசு கப்பலில் சுற்றுலா செல்லலாம்!! – தொடங்கியது ’கார்டிலியா குரூஸ்’ சேவை..!!
சென்னையில் இருந்து கடந்த 2022 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் இயக்கப்பட்ட சொகுசு கப்பலான கார்டிலியா பெரும் வரவேற்பை பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட இந்த சேவை தொடர்ந்து 4 மாதங்களுக்கு செயல்பாட்டில் இருந்தது. இதில் தமிழ்நாடு மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களும் சென்னை துறைமுகம் வழியாக சொகுசு கப்பலில் பயணித்தனர். இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும், ஜூன் 5-ஆம் தேதி சென்னையிலிருந்து இலங்கைக்கு 5 விதமான சுற்றுலா திட்டங்களுடன் கார்டிலியா சொகுசு கப்பல் சேவை தொடங்கியுள்ளது….