லியோ படத்தின் இன்ட்ரோ பாடலை பாடிய விஜய்..!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அவ்வப்போது வரும் சில அப்டேட்டுகளால் அதிகரித்துக் கொண்டே வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் இந்த திரைப்படம்…

மேலும் படிக்க

மீஞ்சூர் அருகே விஷம் குடித்து எலக்ட்ரீசியன் சாவு..!!

திருவள்ளூர் மீஞ்சூர் அருகே புதுப்பேடு கிராமத்தில் கற்பக விநாயகர் கோவில் தெருவில் உள்ள குப்புசாமி நகரில் 2-வது தெருவில் வசிப்பவர் சங்கர் (வயது 38). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். சங்கர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவர் நேற்று உடல் நிலை சரியில்லை என மனைவியிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்தார். இந்தநிலையில் மனைவி கடைக்கு சென்றபோது சங்கர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கிய விழுந்தார். மனைவி…

மேலும் படிக்க

கும்மிடிப்பூண்டியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது..!!

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சேவல் சண்டை நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் நேற்று முன்தினம் வெட்டுகாலனி பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய மெதிப்பாளையத்தை சேர்ந்த சந்துரு (வயது 23), கம்மார்பாளையத்தை சேர்ந்த கலைமணி (30), மங்காவரத்தை சேர்ந்த அஜீத் (26) மற்றும் வெங்கடாதிரிபாளையத்தைச்சேர்ந்த லோகேஷ் (23) ஆகிய…

மேலும் படிக்க

காயத்திலிருந்து குணமடைந்த ‘விக்ரம்’ ~ மீண்டும் தொடங்குகிறது “தங்கலான்” படப்பிடிப்பு..!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கும் திரைப்படம் தங்கலான். பெரும் பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படத்தை ஸ்டியோ கீரின் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது. இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ, ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. தங்கலான் திரைப்படம், கோலார் தங்க வயல் மற்றும் அதனைச் சுற்றி…

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாளில் “இந்தியா சோர்வாகவும், மனமுடைந்தும் காணப்பட்டது” ~சுனில் கவாஸ்கர்..!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாளின் இறுதியில் இந்தியா சோர்வாகவும், மனமுடைந்தும் காணப்பட்டது என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். லண்டன், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.வானம் மேகமூட்டமாக காணப்பட்டதால் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா தயக்கமின்றி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும்…

மேலும் படிக்க

பேரம்பாக்கம் அருகே மின் தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்..!!

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கூவம், குமாரச்சேரி, பிள்ளையார்குப்பம், கொருக்கம்பேடு, பூவனூர், கல்லம்பேடு, கொட்டையூர், நரசமங்கலம் போன்ற பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக அறிவிக்கப்படாத மின்தடை நிலவி வந்தது. இதனால் சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலதரப்பட்ட மக்களும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து அவர்கள் பேரம்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்துக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் கல்லம்பேடு, நரசமங்கலம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடையால் இரவு மக்கள்…

மேலும் படிக்க

பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்..!!

திருவள்ளூர் பொன்னேரி நகராட்சி பகுதியில் அடங்கிய சின்னகாவனம் கிராமத்தில் வசிப்பவர் சார்லஸ் என்கின்ற முருகன் (வயது 35). இவர் வேலை சம்பந்தமாக விடதண்டலம் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் பழவேற்காடு நெடுஞ்சாலை சென்று கொண்டிருந்தார். அப்போது பரிக்கப்பட்டு கிராமம் அருகே எதிர் திசையில் பொன்னேரி நோக்கி வந்த நபர் முருகன் வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்….

மேலும் படிக்க

கனடாவில் இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய சம்பவம்..!!

புதுடெல்லி, கனடாவின் பிராம்ப்டன் நகரில் நடந்த கண்காட்சி அணிவகுப்பு ஒன்றில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டு கொலை செய்யப்படுவது போன்ற சிலைகள் வடிவமைக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த வீடியோ சமூக ஊடகத்தில் பரவியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் பிரதமர் படுகொலையை ஆதரிப்பது போன்று கனடாவில் இந்த கண்காட்சி அணிவகுப்பு நடந்து உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. அதில் ரத்த காயங்களுடன் இந்திரா காந்தியின் சிலை வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது. இந்தியாவின் முதல்…

மேலும் படிக்க

தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.35½ லட்சத்துடன் காரில் டிரைவர் தப்பி ஓட்டம் ~ ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் மடக்கி பிடித்தனர்..!!

அம்பத்தூரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.35½ லட்சம் வசூல் பணத்தை காருடன் டிரைவர் திருடிச்சென்றார். காரில் இருந்த ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் ஊழியர்கள் அவரை மடக்கி பிடித்து பணத்தை மீட்டனர். சென்னை சென்னை அண்ணா நகரில் தனியார் நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் பணம் வசூல் செய்வதும், ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியையும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை காரில்…

மேலும் படிக்க

லாரியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி மூளைச்சாவு ~ ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உடல் உறுப்புகள் தானம்..!!

மாதவரம் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தானம் செய்யப்பட்டன. சென்னை வேலூர் மாவட்டம், முத்துமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). இவர் சென்னை மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கத்தில் லாரி பழுது பார்க்கும் குடோனில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர் கடந்த 4-ந்தேதி லாரி மீது ஏறி வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, திடீரென…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram