Pushpa 2 ~ தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்..!!

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிச.5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் டிச.4 அன்று இரவு 10.30 மணியளவில் திரையிடப்பட்டது. இதனை பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜூன் சந்தியா திரையரங்கிற்கு சென்றார். அப்போது அல்லு அர்ஜூனை பார்ப்பதற்காக அதிக அளவிலான ரசிகர்கள் தியேட்டரில் கூடினர்.இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குடும்பத்தினருடன் பிரீமியர் காட்சி பார்க்க வந்த ரேவதி…

மேலும் படிக்க

பொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் அஜித்தே என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது ~ அஜித்..!!

அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்குடன் இணைந்து அர்ஜூன், ஆரவ், திரிஷா, ரெஜினா கெஸான்ட்ரா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.கடந்த வாரம் ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இப்படத்தின் டீசர் யூடியூபில்…

மேலும் படிக்க

இந்தோனேசியா : ஜாவா தீவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்..!!

இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் மாயமாகினர். மழை வெள்ளத்தில் சிக்கி மாயாமான இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேற்கு ஜாவா மாகாணத்தின் சுகாபூமி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் 170க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. இந்த…

மேலும் படிக்க

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.400 -க்கு விற்பனை..!!

மகாராஷ்டிராவின் நாசிக் மற்றும் குஜராத்தில் இருந்தும் தமிழ்நாட்டின் பல சந்தைகளுக்கு முருங்கைக்காய் கொண்டு வரப்படுகிறது. தற்போது மழை காலம், பனிப்பொழிவு என்பதால் முருங்கை வரத்து வெகுவாக குறைந்துள்ளது. முருங்கை பிஞ்சுகள் கீழே உதிர்ந்து விழுவதால் முருங்கை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.1 கிலோ முருங்கைக்காய் ரூ.400 வரை விற்பனையாகிறது. சில்லரை விற்பனையில் 1 கிலோ முருங்கைக்காய் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக ரூ.250 முதல் ரூ.350 வரை விற்பனையான ஒரு கிலோ முருங்கைக்காய் இன்று…

மேலும் படிக்க

மலேசியா, தாய்லாந்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர்..!!

தொடர் கனமழை காரணமாக மலேசியாவின் கிளந்தான், திரங்கானு உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்களை மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மலேசியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய சுமார் ஒரு பில்லியன் ரிங்கிட்(224 மில்லியன் டாலர்) செலவாகும் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இதே…

மேலும் படிக்க

தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘சிக்கன் 65’ உலகளவில் சிறந்த உணவுகளில் 3ஆம் இடம்..!! 

சிக்கனில் எத்தனை வகையான உணவு வகைகள் வந்தாலும் சிக்கன் 65 என்றால் அனைவரின் நாக்கிலும் எச்சில் ஊரும் என்பதில் சந்தேகமில்லை. பிரியாணி, சப்பாத்தி, குழம்பு வகைகள் என எது சாப்பிட சென்றாலும் சிக்கன் 65 என்பது சொல்லப்படாத மெனுவாக வந்து நமது மேசையில் அமர்வது வழக்கமான ஒன்று.  ஒவ்வொரு ஆண்டும் டேஸ்ட் அட்லாஸ் உலகளவில் மக்களால் ருசித்து சாப்பிடப்படும் உணவுகளை வகைப்பிரித்து அதில் முன்னணி பட்டியலை வெளியிட்டு வருகிறது . இனிப்பு, அசைவம், பருப்புகளில் செய்யப்படும் உணவு…

மேலும் படிக்க

திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன..!!

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் சுமார் 2,668 அடி உயர மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் 11-வது தெருவில் உள்ள வீடுகளின் அருகில் விழுந்தது. அப்போது நிலச்சரிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் மண் இறங்கியது. இதில் ஒரு வீட்டின் மீது நிலச்சரிவு ஏற்பட்டு…

மேலும் படிக்க

சீனாவில் சுத்தமின்மையை காரணம் காட்டி ஹோட்டல்களில் இழப்பீடு கோரி மோசடி..!!

சீனாவின் Zhejiang மாகாணத்தின் Taizhou-வைச் சேர்ந்தவர் 21 வயதுடைய மாணவர் ஜியாங். இவர் தனது பெற்றோர் கல்வி செலவுக்காக கொடுத்த பணத்தை வைத்துக்கொண்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அடிக்கடி ஹோட்டல்களுக்கு சென்று தங்குவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார். அங்கு ஹோட்டல் அறைகளில் இறந்த கரப்பான் பூச்சி, பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், தலைமுடி, சிள் வண்டு போன்றவற்றை வைத்துவிட்டு, பின்னர் ஒன்றும் தெரியாதது போல், ஹோட்டல் நிர்வாகத்தை அழைத்து அறை சுத்தமாக இல்லை என புகார் செய்வார். தொடர்ந்து…

மேலும் படிக்க

மாய உலகிற்கு அழைத்துச் சென்ற ‘ஷங்கர்’..!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராம் சரண். கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் எனும் படத்தில் நடித்துள்ளார். இதில் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார்.இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, அஞ்சலி, நாசர், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்க, திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் “ஜரகண்டி” மற்றும்…

மேலும் படிக்க

ஈரோட் ~ 7 -ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு..!! கூலி தொழிலாளி கைது..!! 

ஈரோடு பகுதியைச் சேர்ந்த 7ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோர் வேலைக்கு சென்ற பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பியதும் தனியாக இருந்திருக்கிறார்.அப்போது, சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த கூலித் தொழிலாளர்சுப்பிரமணியம் என்பவர் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில்ஈடுபட்டு தொந்தரவு கொடுத்துள்ளார்.இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனடியாக சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் துறையினரிடன் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram