பெங்களூரு சந்தையை பார்வையிட்ட வெளிநாட்டு யூடியூபரை தாக்கிய நபர் – அதிர்ச்சி வீடியோ..!!
பெங்களூரு, நெதர்லாந்து நாட்டை சேர்ந்த யூடியூபர் பெட்ரொ மொடா. இவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அது தொடர்பான வீடியோக்களை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், பெட்ரோ மொடா கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜோர் பசார் என்ற ஞாயிற்றுக்கிழமை சந்தை பகுதிக்கு சென்றுள்ளார். சந்தை பகுதியில் விற்பனை செய்யப்படும் ஆடை, உள்ளிட்ட பொருள்களை தனது கேமராவில் பதிவு செய்தவாறு சென்றுகொண்டிருந்தார். அப்போது, சந்தை பகுதியில் நின்றுகொண்டிருந்த நபர் திடீரென யூடியூபர் மொடாவின்…