அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.தனுஷின் பிறந்தநாளன்று திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஜனவரி 12 அன்று திரைப்படம் வெளியாக உள்ளது.
சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “பின்னணி இசையும் இசைக் கலப்பு (மிக்சிங்) பணியும் முடிந்தது. கேப்டன் மில்லர் தீயாக இருக்கிறது. தனுஷுக்கான அறிமுக இசைக்குக் காத்திருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
NEWS EDITOR : RP