பிடிஎஸ் (BTS) என்பது தென் கொரிய நாட்டின் இசைக்குழு. இந்த இசைக்குழு 2013-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்தக் குழுவின் பாடல்கள், தென் கொரியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இந்தக் குழுவில் ஆர்.எம், ஜின், சுகா, ஜெ ஹோப், ஜிமின், வி, ஜுங்குக் என ஏழு இளைஞர்கள் உள்ளனர். இந்த K-Pop இசைக்குழு உலகம் முழுவதும் தற்போது பிரபலமடைந்துள்ளது. இந்த பிடிஎஸ் கொரியன் இளைஞர்கள் வெளியிடும் ஒவ்வொரு பாடல்களும் காட்சிகளும் உலகளவில் அதிகம் பகிரப்படுகின்றன. இவர்களுடைய பெரும்பாலான பாடல்கள் கொரிய மொழியில் ஆங்கிலம் கலந்துதான் எழுதப்பட்டிருக்கும். இவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர்.
Please follow and like us: