பிரிட்டன் அரச குடும்பத்தில் மன்னர் சார்ல்ஸ்- டயனாவின் இளைய மகன் ஹாரி. பிரிட்டன் அரச குடும்பத்தின் செல்லப் பிள்ளையாக வளர்ந்த வந்த இவர், 2007-2008 ஆண்டுகளில் பிரிட்டிஷ் ராணுவத்தில் விமானக் கட்டுப்பாட்டாளராக பணியாற்றினார்.. மேலும், 2012-2013க்கு இடையே தாக்குதல் ஹெலிகாப்டர் குழுவிலும் அவர் இடம் பெற்றிருந்தார். அப்போது சில வாரங்கள் அவர் ஆப்கானிஸ்தானிலும் பணியமர்த்தப்பட்டு இருந்தார். அப்போது நடந்த அனுபவங்கள் குறித்து அவர் தனது ஸ்பேர் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.
இளவரசர் ஹாரி, தனது ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய பிறகு, 12 வயதில் தனது தாயார் இளவரசி டயானாவை இழந்த “அதிர்ச்சி குறித்து தெரிவித்துள்ளார். நெட்பிளிக்ஸ் தளத்தில் தனது ‘Heart of Invictus’ ஆவணப்படத்தில், தனது ” மிகப்பெரிய போராட்டம்” என்பது “என்னைச் சுற்றியுள்ள எவராலும் உண்மையில் உதவ முடியாதது என தெரிவித்துள்ளார்.உண்மையில் எனக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பியதுதான் தூண்டுதலாக இருந்தது., 12 வயதில் வயதிலேயே என் அம்மாவை இழந்த, அதிர்ச்சியை உண்மையில் அறிந்திருக்கவில்லை. இருப்பினும், பெரும்பாலான இளைஞர்களை போல நான் அதை அடக்கிக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.முதன்முதலில் ராணுவத்தில் சேர்ந்த போது மனநோய் என்பது ஒரு “அழுக்கு வார்த்தை” என்றும், சமூகத்தில் உள்ள “இழிவை” குணப்படுத்த விரும்புவதாகவும் இளவரசர் கூறியிருந்தார்.
NEWS EDITOR : RP