ரிசர்வ் வங்கிக்கு ரஷிய மொழியில் வெடிகுண்டு மிரட்டல் –

Spread the love

மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு ஒரே மாதத்தில் 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. நேற்று மதியம் ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ரஷிய மொழியில் எழுதப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.இதுதொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக நவம்பர் 16-ம் தேதி, ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மறு பக்கம் பேசியவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி (சி இஓ) என்று கூறினார். மேலும் அவர் மிரட்டல் விடுப்பதற்கு முன் தொலைபேசியில் ஒரு பாடலைப் பாடியதாகக் கூறப்படுகிறது.

2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையில் சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையம், தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 175 பேர் வரை உயிரிழந்தனர், 300 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவார அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram