சென்னை, தமிழகத்தில் கவர்னர் ஆர்என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் மற்ற அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, கவர்னரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சர்வதேச யோகா தினத்தையொட்டி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில், ஆர்.என்.ரவி கலந்துகொண்டு யோகா செய்தார். யோகா நிகழ்ச்சியை முடித்துவிட்டு கடலூர் வழியாக செல்லும்போது கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளது.
அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்ட முடிவு செய்துள்ளது.
NEWS EDITOR : RP