நிலவில் நாசா ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இது தொடர்பாக, காந்த அலைகளின் தரவுகள் மற்றும் பூமியில் உள்ள எரிமலை குழாய்களை ஒப்பிட்டு NATURAL ASTRONOMY என்ற இதழில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், நிலவின் மேற்பரப்பில் இருந்து சுமார் 100 மீட்டர் ஆழத்தில் குகை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் அங்கு தங்கி ஆய்வு பணியில் ஈடுபட வாய்ப்புள்ளது. கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் தரையிறங்கிய இடத்தில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் குகை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Please follow and like us: