நந்தமூரி பாலகிருஷ்ணா ஆந்திர சட்டமன்ற உறுப்பினரும், இந்தியத் திரைப்பட நடிகருமாவார். ஜூனியர் பாலய்யா என அழைக்கப்படும் இவர், ஆந்திராவில் முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் ஆறாவது மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. நடிகைராக மட்டுமின்றி இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் உள்ளார் பாலகிருஷ்ணா. ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பும் பாலகிருஷ்ணாவுக்கு என பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கில் பாலகிருஷ்ண நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் வெளியானது. இந்நிலையில் முதல் நாளிலேயே வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் 54 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய் நடித்த வாரிசு, மற்றும் அஜித் நடித்த துணிவு படத்தின் வசூல் சாதனையை முறியடித்ததாக கூறப்படுகிறது.
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது 108-வது படமாக உருவாகி வரும் படம் ‘பகவந்த் கேசரி’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. இப்படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். காஜல் அகர்வால், ஸ்ரீலீலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷைன்ஸ் ஸ்கீரின் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. தமன் இசையமைக்கும் இந்தப் படம் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாக உள்ளது.
NEWS EDITOR : RP