தினசரி 1,000-க்கும் மேற்பட்டோின் கணக்குகளை முடக்கும் வங்கிகள்..!! அதிர்ச்சியில் பிரிட்டன் மக்கள்..!!

Spread the love

பிரிட்டனில் ‘டிபாங்கிங்’ எனப்படும் வங்கி மோசடி ஒன்று அரங்கேறியுள்ளது. அதன்படி அங்கு இயங்கும் பல வங்கிகள் ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரித்து, வங்கிகளின் இந்த நடவடிக்கையால் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து சுதந்திரக் கட்சி (யுகேஐபி) தலைவர் நைஜெல் ஃபரேஜ், இந்த ஊழலை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்று
வலியுறுத்தியுள்ளதோடு, கணக்கு முடக்கப்பட்டவர்களின் சார்பில் பிரச்சாரம் செய்ய இணையதளம் ஒன்றை தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

குறிப்பாக கடந்த 2016 மற்றும் 2017 க்கு இடையில், வங்கிகள் சுமார் 45 ஆயிரதிற்கும் அதிகமான கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றதை தொடர்ந்து, கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 343,000 க்கும் அதிகமாக இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் மூடப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.

இந்த விவரம் நிதி நடத்தை ஆணையத்திடம் (FCA) தாக்கல் செய்யப்பட்ட தகவல்
சுதந்திரம் (FOI) கோரிக்கையின் அடிப்படையில் வெளிவந்துள்ள புள்ளிவிவரங்களின் கீழ் தான் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக வங்கிகள் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் கணக்குகள் மூடப்பட்டது குறித்து தகவல் கூட தெரிவிக்கவில்லை என்று
கூறப்படுவதோடு, இதில் பல முக்கிய பொறுப்புள்ள நபர்களும் அடங்குவர் என சொல்லப்படுகிறது.சுமார் 90 ஆயிரம் மூடப்பட்ட கணக்குகளின் கணக்கு வைத்திருப்பவர்கள் அரசியலுடன் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து எம்.பி.க்கள் சிலரும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது” இது குறித்து தீவிர விசாரணை நடத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் தலைவர் நைகல் ஃபரேஜ் இது குறித்து பேசுகையில், ”நாடு முழுவதும் சிறு தொழில்கள் மற்றும் நடுத்தர வணிகர்களின் கணக்குகள் மூடப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆயிரக்கணக்கான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இவர்கள் எந்த தவறும் செய்யாதவர்கள். இப்படி வங்கிகளால் கணக்கு முடக்கப்பட்டவர்களில் பிரிட்டனின் பல தலைவர்களும் அடங்குவர் என்று கூறப்படுகிறது.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram