மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரத்தில் ஆர்.எஸ்.புரம் துணை சுகாதார நிலையத்தின் மிகவும் கட்டடம் மோசமான நிலையில் இருப்பதாகவும், அதனை இடித்துவிட்டு புதிய சுகாதார நிலையம் கட்ட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி சம்பந்தப்பட்ட மருத்துவமனை கட்டடத்தை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் மருத்துவமையில் நேரில் ஆய்வு செய்த நீதிபதி, அதன் அறிக்கையை புகைப்படங்களுடன் இன்று கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘மருத்துவமனை கட்டடம் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பது இந்த புகைப்படங்கள் மூலம் தெரிகிறது. மேலும் மாவட்ட நீதிபதியின் அறிக்கையும் அதனை சுட்டிக்காட்டுகிறது. ஏன் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று கேள்வி எழுப்பினர்.
ஒரு மருத்துவமனை இது போல் மோசமான நிலையில் இருந்தால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வாறு மருத்துவம பார்க்க வருவார்கள்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாவட்ட நீதிபதியின் அறிக்கையை புகைப்படங்களுடன் மருத்துவத்துறை செயலாருக்கு அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு குறித்து வரும் 6-ந்தேதி மருத்துவத்துறை செயலாளர் காணொலி வாயிலாக ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
NEWS EDITOR : RP