உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ராமர் கோயிலின் மேற்கூரையில் நீர் கசிவதாக எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அயோத்தியின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் ராமர் கோயி்லுக்குச் செல்லும் பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. கோயிலுக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனுடன் சாலையோரம் இருந்த வீடுகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சாலையின் பல பகுதிகளில் குண்டும், குழிகளும், ஆங்காங்கே பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன. அயோத்தியில் உள்ள ஸ்ரீராம் மருத்துவமனையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அயோத்தி ராமர் கோயில் சாலை கட்டுமானப் பணிகளில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி துருவ் அகர்வால், அனுஜ் தேஷ்வால், பிரபாத் பாண்டே, ஆனந்த் குமார் துபே, ராஜேந்திர குமார் யாதவ் மற்றும் முகமது ஷாஹித் ஆகிய 6 அதிகாரிகளையும் மாநில அரசு அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.