கடந்த 2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூல் சாதனை செய்தது. அதி நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, கனவுலகத்தை திரையில் காட்சிப்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்த அவதார் முதல் பாகம் ஏராளமான விருதுகளையும் குவித்தது. இதன் மூலம் உலகம் முழுவதும் அவதார் திரைப்படத்திற்கு என பல ரசிகர்களை உருவாக்கியது.
இந்நிலையில், ஜேம்ஸ் கேமரூனின் அவதார் திரைப்படத்தின் 2-ம் பாகம் அவதார் ”தி வே ஆப் வாட்டர்” என பெயரிடப்பட்டு உலகம் முழுவதும் 160 மொழிகளில் 52,000 திரையரங்குகளில் கடந்த டிசம்பர் 16-ம் தேதி வெளியானது. இப்படத்தில் சாம் வொர்திங்டன், ஜோ சல்டானா, ஸ்டீபன் லாங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் இரண்டாம் பாகம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
மிகப் பிரம்மண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ.15 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்நிலையில், அவதார் 2 திரைப்படம் இன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்தத்தின் காரணமாக 20த் சென்சுரி ஃபாக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP