Media

அமெரிக்காவில் நகைக்கடை பாதுகாப்பு பெட்டகத்திற்குள் சிக்கிய வாடிக்கையாளர்..!!

நியூயார்க் நகரத்தின் டயமண்ட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகைக் கடையில்,  23 வயதுடைய வாடிக்கையாளர் ஒருவர் அங்குள்ள பாதுகாப்பு பெட்டகத்தில்  இரவு சுமார் 10 மணி நேரம் சிக்கிக் கொண்டார். அக்டோபர் 24 அன்று மாலை 7 மணியளவில் 580 ஐந்தாவது அவென்யூ கட்டிடத்திற்குள் சிக்கினார்.  இறுதியில் அக்டோபர் 25 ஆம் தேதி காலை 6 மணியளவில் அவர் மீட்கப்பட்டார். இந்த நகைக்கடை, வாடிக்கையாளர்களுக்காக பாதுகாப்பு பெட்டக சேவையையும் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.  அந்த வகையில் நகைக்கடையின்…

மேலும் படிக்க

தங்கம் விலை நிலவரம்..!!

சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது. சென்னை – ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 5,700 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கம் விலை ₹ 6,220 (1 கிராம்) ஆகவும் உள்ளது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்காசி பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை களைகட்டியது..!!

தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் தற்போது முதல்  தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக, ஏராளமான பொதுமக்கள் தற்போது  முதலே புத்தாடைகள் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்கி வருகின்றனர்.  தீபாவளி பண்டிகை அன்று புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து அசைவஉணவுகளை சமைத்து படையல் இட்டு சொந்த பந்தங்களுக்கு பரிமாறி தீபாவளி பண்டிகைகளை கொண்டாடுவது வழக்கம்.  அந்த வகையில், தீபாவளி தினத்தன்று…

மேலும் படிக்க

கடந்த 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தையில் சரிவு..!!

ஹமாஸ் – இஸ்ரேலுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் நிச்சயமற்ற சூழல் காணப்பட்டு வருகிறது. முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். தங்கள் வசமுள்ள பங்குகளை விற்று வெளியேறுவது அதிகரித்துள்ளது. இதனால், பங்குச் சந்தையில் தொடர் சரிவு காணப்படுகிறது.நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 522 புள்ளிகள் குறைந்து 64,049 ஆக சரிந்தது. நிஃப்டி 159 புள்ளிகள் குறைந்து 19,122 ஆக குறைந்துள்ளது. சதவீத அடிப்படையில் சென்செக்ஸ் 0.81 சதவீதமும்…

மேலும் படிக்க

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் பிடிபட்ட மீன்களை வாங்கிய வியாபாரிகள் கேரளாவுக்கு கொண்டு செல்ல பெட் டிகளில் வைத்துள்ளனர்..!!

கன்னியாகுமரி மாவட்டம் 1,672 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இயற்கை எழில்சூழ்ந்த மாவட்டமாகும். தென்னை, ரப்பர், அன்னாசிபழம், வாழை, பாக்கு, மரச்சீனி, பலா, தேன், கிராம்பு உள்ளிட்ட பல்வேறு விளைபொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்த இயற்கை பொருளாதாரத்தை இங்கு ஏற்படுத்த இயலும். இயற்கை தரும் உற்பத்தி பொருட்களைக் கொண்டு மாவட்டத்தில் பல தொழில் முனைவோரை ஏற்படுத்த முடியும். இதனால் பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெறுவர். இதுபோல் 72 கி.மீ. நீளமுள்ள இம்மாவட்ட கடற்கரை,…

மேலும் படிக்க

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை..!!

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆவின் வாயிலாக, தினமும் 30 லட்சம் லிட்டர் மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பாலை பதப்படுத்தி, ஆரஞ்சு, பச்சை, நீல நிறப் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, பால் உபபொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உட்பட 225 வகையான பால் பொருட்களை தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து, ஆவின் பாலகங்கள் மற்றும்…

மேலும் படிக்க

ஐஸ்லாந்து நாட்டில் சம வேலைக்கு சம ஊதியம்..!!

ஐஸ்லாந்து நாட்டில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில் ஆண்களின் வருமானத்தை விட 20 சதவீதம் குறைவாகவே பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவம் போன்ற பொதுநல சேவைகளில் அதிக அளவில் பெண்கள் ஈடுபட்டிருந்தாலும், போதிய அளவிலான ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில் இதனை கண்டித்து நேற்று ஐஸ்லாந்து நாட்டில் உள்ள 90% பெண்கள், பணிகளை புறக்கணித்துவிட்டு ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுனர். 50 ஆண்டுகளுக்கு முன்பே சம வேலைக்கு சம ஊதியம்,…

மேலும் படிக்க

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி 2’ திரைப்படம் பிரபல ஓடிடி நிறுவனமாக ‘நெட்ஃப்ளிக்ஸில்’ இன்று வெளியாகியுள்ளது..!!

கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறுஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.13 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம்செப்.28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி…

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வருகிற அக்டோபர்  29, 30ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!!

“தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக  தமிழ்நாட்டில் வருகிற அக்.26 முதல் நவ.1 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல அக்.29-ம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு…

மேலும் படிக்க

சூரரைப் போற்று படத்தின் கூட்டணி சூர்யாவின் 43வது படத்தில் மீண்டும் இணைந்துள்ளது..!!

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.  முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார். இந்நிலையில், மீண்டும் இக்கூட்டணி இணைய உள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் சுதா கொங்கரா தயாரிக்கும் சூர்யாவின் புதிய படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.  NEWS EDITOR :…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram