இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர்நிறுத்தத்தை வலியுறுத்தி, நியூயார்க் நகர மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது..!!
இஸ்ரேல் தொடர்ந்து 21-வது நாளாக, நேற்று காஸா பகுதி முழுவதும் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. கடுமையான போர் காரணமான காஸா பகுதியில் இணையத்தை முடக்கியதால், பாலஸ்தீனிய எல்லைக்குள் இருக்கும் 23 லட்சம் மக்களுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.காஸாவின் ஹமாஸ் அரசின் சுகாதார அமைச்சகம் இஸ்ரேல் படை தாக்குதலில் இதுவரை 7,300 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது. அவர்களில் 60% க்கும் அதிகமானோர் சிறார்கள் மற்றும் பெண்கள். அக்டோபர் 7-ம் தேதி தெற்கு இஸ்ரேலில் தரை மற்றும் வான்…