சர்வதேச அளவில் விருதுகளை அள்ளி குவித்த ‘கூழாங்கல்’ திரைப்படம்..!!
வினோத்ராஜா இயக்க விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. பொட்ட காட்டில் வசிக்கும் குடும்பம் அந்த குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளை அடிப்படையாக வைத்து எடுத்திருக்கும் சின்ன பட்ஜெட் திரைப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.மதுபழக்கத்திற்கு மிகவும் அடிமையான கணபதி (கருத்தடையான்) என்ற நபர் தண்ணீர் பஞ்சத்துடன் உள்ள வறண்ட பகுதியில் வாழ்ந்து வருகிறார். தன்னுடைய மனைவியோ கோபித்து கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்றுவிடுகிறார். இந்நிலையில், தனது மகனை (செல்லப்பாண்டி) பள்ளியில்…