புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாட்டம்..!!
புதுச்சேரி யூனியன் பிரதேசம் கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த நிலையில், 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரிக்கு விடுதலைகிடைத்தது. இந்நிலையில் புதுச்சேரி விடுதலை திருநாள் இன்று அரசு சார்பில் கடற்கரை சாலையில் கொண்டாடப்பட்டது. விடுதலை நாளையொட்டி கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறையின் பல்வேறு படைப்பிரிவினவரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நிகழ்ச்சியில்…