Media

சிறைக்குள் மது அருந்திய தலைமைக்காவலர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறைச்சாலையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் ஜெயக்குமார். இவர் பணியில் இருக்கும் போதே கிளை சிறைச்சாலை வளாகத்தில் மது அருந்தி கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பணியில் இருக்கும் போதே அநாகரீகமாக நடந்து கொண்ட தலைமை காவலர் மீது சிறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.  இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி உத்தரவிட்டார். அதன்படி வேலூர் சிறைக்கண்காணிப்பாளர்…

மேலும் படிக்க

காஸாவில் 24 மணி நேரத்தில் 160 பாலஸ்தீனியர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது..!!

கடந்த அக்டோடர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஸா மீது இஸ்ரேல் நடத்திய கொடிய தாக்குதலில் பாலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதில் 6,150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 4,000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆவார். ஹமாஸ் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும், 200-க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் பிடிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியது. பாலஸ்தீன கடலோரப் பகுதியின் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 160 பாலஸ்தீனியர்களின் உடல்கள்…

மேலும் படிக்க

10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரத்தை உருவாக்கும் பணியில் தற்போது தீவிரம் காட்டி வருகிறார் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர்..!! 

500 அடி உயரம் கொண்ட இந்தக் கடிகாரம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான மலை ஒன்றுக்குள் கட்டப்பட்டு வருகிறது.  இதற்கு 350 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தக் கடிகாரத்திற்கானத் திட்டம் டேனி ஹில்லிஸ் எனும் அறிவியலாளருடையது.  இந்தக் கடிகாரத்திற்கு க்ளாக் ஆப் தி லாங் (Clock of the Long) எனப் பெயரிட்டுள்ளனர். மேலும் இந்தக் கடிகாரத்தின் நொடிமுள் ஒரு ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது ஒரு வருடம் என்பது…

மேலும் படிக்க

டெல்லி : நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட  9பேரை விடுதலை செய்து டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..!!

டெல்லி வன்முறை சம்பவத்தின்போது, வன்முறை மற்றும் சொத்துகளை நாசப்படுத்திய வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேரை விடுதலை செய்து டெல்லியின் கர்கர்டூமா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  டெல்லி வன்முறை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் இருக்கும் சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு சாதகமாக்கி, 9 பேரையும் விடுதலை செய்வதாக டெல்லியின் கர்கர்டூமா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி புலஸ்தியா பிரம்மசாலா,…

மேலும் படிக்க

39 பாலஸ்தீனர்கள் விடுதலை : இஸ்ரேல்..!! 

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், 13 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்ததை அடுத்து, இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேலில் உள்ள சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அக்டோபர் 7-ம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர்…

மேலும் படிக்க

‘இந்தியா’ மற்றும் ‘சீனாவை’ சேர்ந்தவர்கள் இனி விசா இன்றி ‘மலேசியாவுக்க வருகை தரலாம்..!!

புத்ரஜெயாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் நீதிக் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: மலேசியாவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கூடுதல் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதன் மூலம் அதிக அளவில் அந்நியச் செலாவணி வருவாயினை பெற முடியும். இதை மனதில் கொண்டே சீனா மற்றும் இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இனி விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 30 நாட்கள்…

மேலும் படிக்க

நடிகை “சமந்தா”, 2 ஆதரவில்லா குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..!!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா.  இவர் மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  சிகிச்சையின் பலனாக அவருக்கு உடல்நலம் தேறி வந்த நிலையில்,  மீண்டும் மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் அண்மையில் வெளியாகின.இதனை தொடர்ந்து,  மயோசிடிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மயோசிடிஸ் இந்தியா என்ற…

மேலும் படிக்க

கோவை: ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தில் 100 சவரன் நகைகள் கொள்ளை..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம், 100 அடி சாலையில் ஜோஸ் ஆலுகாஸ் தங்க நகைக்கடை செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில்,  நேற்று இரவு நகைக்கடைக்கு வந்த மர்ம நபர்,  100 சவரன் அளவிலான நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.  அத்துடன் காவல் துறையினர் தற்போது தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் புகுந்து கொள்ளையடித்தது யார்? என்ற விசாரணையில், சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட…

மேலும் படிக்க

கேரள : கடத்தப்பட்ட 6 வயது சிறுமியை 21 மணி  நேரத்திற்கு பின், கொல்லம் ஆசிரமம் அருகே விட்டு விட்டு  மர்ம கும்பல் தப்பி ஓடியது..!!

கேரள மாநிலம்,  கொல்லம் மாவட்டம், ஓயூரைச் சேர்ந்த 6 வயது சிறுமி சாரா ரிஷி.  இவர் நேற்று மாலை தனது அண்ணன் ஜோனாதனுடன் டியூஷனுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 4  பேர்கொண்ட மர்ம கும்பல் சாராவை காரில் இருந்தபடியே  வலுகட்டாயமாக கடத்திச் சென்றது. அந்த மர்ம கும்பல் தொலைபேசி மூலம், சாராவின் பெற்றோரை அழைத்து உங்கள் மகளை கடத்திவிட்டதாகவும்,  சிறுமியை விடுவிக்க ரூ.5 லட்சம் கொடுக்குமாறும் கூறியுள்ளது.  பின்னர் இரவு 10 மணிக்கு மீண்டும்…

மேலும் படிக்க

இஸ்ரேல் ஹமாஸ் போரின் தற்காலிகப் போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடைகிறது..!!

இஸ்ரேல் ஹமாஸ் போரின் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி,  கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.  கைதிகள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இன்றே போர் நிறுத்தத்தின் கடைசி நாள் என்பதால்,  நாளை முதல் போர் துவங்குமா அல்லது தற்காலிகப் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ‘போர் நிறுத்தத்தை நீட்டிப்பதுதான் நமது இலக்கு.  இன்னும் நிறைய பிணைக் கைதிகளை மீட்கவும்,  காஸாவில் உள்ள மக்களுக்கு நிறைய மனிதாபிமான உதவிகளை அனுப்புவதற்கும் போர் நிறுத்தம் மிகவும்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram