அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு..!!17 பேர் உயிரிழப்பு..!!
மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத அதி கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை பெருநகரில் 69 இடங்களில் இதுவரை 17 பேர் உயிரிழந்தனர். அடையாறு கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி போக்குவரத்து நிலை, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த தகவலை சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ளது. புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை….