Media

ஆவின் பால் கொள்முதல் விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்..!!

ஆவின் நிறுவனம் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் இந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குத் தேவையான கலப்புத் தீவனத்தையும், கால்நடை மருத்துவ வசதிகளையும், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு மையங்கள் வாயிலாக ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்தக் கோரிக்கை அரசால் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு, இடுபொருட்களின் விலை உயர்வை…

மேலும் படிக்க

நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த நபர்

நாடாளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்தபோது பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்கள், சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் அங்கு புகை மண்டலம் எழுந்தது. இதனால் அங்கிருந்த எம்பிக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். அத்துமீறிய இருவரும் வண்ணத்தை உமிழும் பொருளை வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய இருவரால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது. தடை செய்யப்பட்ட பொருட்களுடன் மக்களவையில் நுழைய முயன்ற இருவரை தடுத்துநிறுத்தி போலீசார் கைது செய்தனர். அதேவேளையில்…

மேலும் படிக்க

குறைந்து வரும் தங்கம் விலை

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.160 குறைந்து ரூ.45,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.77 க்கு விற்பனை செய்யப்படுகிறது. NEW EDITOR : RP

மேலும் படிக்க

ராமர் பாலம் விவகாரம்

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மக்களவையில் உறுப்பினர்களின் கேள்வி ஒன்றுக்கு மத்திய கலாசாரத்துறை மந்திரி கிஷண் ரெட்டி எழுத்துமூலம் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில்,’ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கும் விவகாரம் கோர்ட்டு விசாரணையில் உள்ளது. அதேநேரம் கடலில் மூழ்கிய பகுதிகள் எதையும் தேசிய சின்னமாக அறிவிக்கும் பரிந்துரை எதுவும் தற்போது நிலுவையில் இல்லை’ என தெரிவித்தார். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

25 மருத்துவமனைகளை முடக்கியது இஸ்ரேல்

பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி முதல் இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்து வருகிறது. காசாவின் ஆட்சியாளர்களான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது. ஆரம்பத்தில் வான் வழியாக மட்டும் காசா மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம் பின்னர் கடல் மற்றும் தரைவழியாகவும் தாக்குதல்களை விரிவுப்படுத்தியது. அந்த வகையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக காசாவை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வரும்…

மேலும் படிக்க

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை..!!

விருதுநகர் மாவட்டம்,  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த நிலையில், பிரதோஷம், அமாவாசை நாட்களில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பெரும் அளவில் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதனை தொடர்ந்து, இக்கோயிலுக்கு கார்த்திகை மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டுக்காக டிசம்பர் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 13 ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் படிக்க

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்துவரும் போரில் அழிக்கப்பட்டு வரும் காஸாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களை பாதுகாக்குமாறு யுனெஸ்கோ அமைப்பிற்கு ஹமாஸ் வேண்டுகோள்..!!

காஸா நகரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுமானங்களை இஸ்ரேல் சிதைத்து வருவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. காஸாவின் மிகப்பெரிய ஓமரி மசூதி சிதைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளன. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து புனிதத்தளமாக இருந்து வந்த கோயில் இப்போது இஸ்ரேல் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டுள்ளது. போர் துவங்கியதிலிருந்து இதுவரை 104 மசூதிகளும் மூன்றுக்கும் அதிகமான தேவாலயங்களும் இஸ்ரேல் தாக்குதலால் அழிக்கப்பட்டுள்ள நிலையில் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் நிலை நிறுத்தும் பழமை வாய்ந்த கட்டடங்களைக் காக்க வேண்டும் என ஹமாஸின்…

மேலும் படிக்க

25 லட்ச ரூபாய் மதிப்பு பொருட்களை கேட்காமல் அனுப்பிய தோழர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 1000 மாற்றுத்திறனாளிகள் சார்பாக நன்றி : பேராசிரியர் தீபக்நாதன்..!!

பேராசிரியர் தீபக்நாதன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திடீர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து, அவசரமாக பார்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது. சென்றவுடன், எழுந்து வந்து வரவேற்றார். ஆச்சர்யமாக இருந்தது. மாற்றுத்திறனாளிகள் வெள்ளத்தால் பாதித்திருப்பார்களே, விவரம் உண்டா என்றார். ஆம், மளிகை சாமான்கள் உடனடியாக கிடைத்தால் உதவியாக இருக்கும் முயற்சித்து வருகிறேன் என்றேன். உடனே எண்ணிக்கை விலாசம் கொடுங்கள், மாலைக்குள் வரும் எனச் சொல்லி, அவரே கதவை திறந்து…

மேலும் படிக்க

‘அன்னபூரணி’ திரைப்படத்தின் புரமோஷனுக்கான கலந்துக்கொண்ட நடிகை நயன்தாரா, “தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்காதீர்கள்” என கூறியுள்ளார்..!!

சமீபத்தில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு,  நடிகர் விஜய் லியோ வெற்றி விழாவில் முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில், தற்போது நயன்தாரா சூப்பர் ஸ்டார் குறித்து பேசியுள்ளதால் மீண்டும் விவாததுக்குள்ளாகி வருகிறது. அவரது ரசிகர்கள் பலரும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து, நடிகை மாளவிகா கூறியதாவது, “லேடி என்பதை எடுத்து விட்டு, பாலின சமத்துவமாக அனைவரையும் சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கலாம்” எனக் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து,  இவர் நயன்தாராவை குறிப்பிட்டு பேசுகிறார்…

மேலும் படிக்க

17 செயலிகளை ‘கூகுள்’ நிறுவனம் ‘ப்ளே ஸ்டோரி’லிருந்து நீக்கியுள்ளது..!!

இஎஸ்இடி அறிக்கையின்படி, கடந்த ஓராண்டு முழுவதும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்த இந்த 18 செயலிகளும், அவற்றின் வாடிக்கையாளர்களை உளவுபார்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகளை பயன்படுத்துவோரின் செல்போனில் இருக்கும் ஏராளமான தகவல்களை இந்த செயலிகளை பயன்படுத்தி அந்நிறுவனம் திருடியிருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த செயலிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கடன் அளித்து,  அவர்களின் தகவல்களை திருடி, அதன் மூலம் கடன் பெறுவோரிடமிருந்து அதிக வட்டிக் கேட்டு மிரட்டுவதும்,  அவர்களின் புகைப்படங்களை, வாடிக்கையாளர்களின் செல்ஃபோனிலிருக்கும் தொலைபேசி எண்களுக்கு அனுப்புவோம் என்பது போன்ற…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram