Media

மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி காரணமாக, குறிப்பிட்ட நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அவசியமற்றது : ஸ்மிருதி இரானி..!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிச.4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று (டிச. 13) நாடாளுமன்ற மாநிலங்களவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, நாட்டில் மாதவிடாய் சுகாதாரக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கொடுத்துள்ள பதில் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்துள்ள பதில், “மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு குறைபாடு அல்ல. இது பெண்களின் வாழ்வில்…

மேலும் படிக்க

பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தொடர்பான வழக்கில் அந்நிறுவன உரிமையாளரின் மனைவி கார்த்திகா திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்..!!

திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரணவ் ஜுவல்லரி இயங்கி வந்தது. இதன் இயக்குநர்களாக திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா இருந்து வந்தனர்.குறிப்பாக, ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 2 சதவீதம் வட்டி வழங்கப்படும் எனவும் அப்படியில்லை என்றால் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்க நகைகளை 10 மாதங்கள் கழித்துப் பெறலாம் என்றும் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டனர். இது மட்டுமின்றி 11…

மேலும் படிக்க

நோஸ்ட்ராடாமஸ்  2024-ம் ஆண்டிற்கான அச்சுறுத்தும் கணிப்புகளை வெளியிட்டுள்ளார்..!!

நோஸ்ட்ராடாமஸ் 16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு ஜோதிடர்,  தீர்க்கதரிசி,  தத்துவவாதி, மருத்துவர் ஆவார்.  அவரது முழுப்பெயர் மைக்கேல் டி நாஸ்ட்ராடாமஸ்.  அவர் “அழிவின் தீர்க்கதரிசி” என்றும் அங்கீகரிக்கப்படுகிறார்.  அவர் 1555 இல் எழுதிய புகழ்பெற்ற புத்தகமான ‘லெஸ் ப்ரோபசீஸ்’ மூலம் அறியப்படுகிறார்.  இது 942 கவிதை வரிகளின் தொகுப்பு.  இது எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி கூறுகிறது.நோஸ்ட்ராடாமஸின் புத்தகத்தில் ‘தீவுகளின் ராஜா’ ‘பலத்தால் விரட்டப்படுவார்’ என்று எழுதப்பட்டுள்ளது.  நாஸ்ட்ராடாமஸ் மூன்றாம் சார்லஸ் அரசரைப் பற்றி பேசுகிறார் என்று சிலர் நினைக்கிறார்கள்….

மேலும் படிக்க

காஞ்சிபுரம் : மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரண வழங்குவதற்கான டோக்கன்கள் முதல்கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது..!!

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்தது. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.மேலும் வீடுகளில் இருந்த முக்கிய பொருட்கள் வெள்ளத்தால் சேதம் அடைந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

ரூ.6,000 நிவாரணத் தொகை..!! தமிழக அரசின் விதிமுறைகள் விவரம்..!!

வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்களை இழந்த குடும்பங்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலமாக டோக்கன் வழங்கும் முறையை பின்பற்றி ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழகத்தில் 2023 டிச.3 மற்றும் டிச.4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில்…

மேலும் படிக்க

தங்கம் விலை குறைந்து..!!

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,720-க்கும், பவுனுக்கு ரூ.240குறைந்து ரூ.45,760-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.49,520-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.70-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.77,700 ஆக உள்ளது.

மேலும் படிக்க

நடிகர் ‘சூர்யா’ உள்ளிட்டோருக்கு இயக்குநர் ‘அமீர்’ நன்றி தெரிவித்தார்..!!

இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தால் எழுந்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது.  இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீர் தன் பணத்தைப் பொய் கணக்குக் கூறி திருடிவிட்டார் எனக் கடும் குற்றச்சாட்டை வைத்தார்.  இதைத் தொடர்ந்து, அமீருக்கு ஆதரவாக இயக்குநர்கள் பாரதிராஜா, கரு.பழனியப்பன்,  சசிகுமார்,  சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் அறிக்கை வெளியிட்டனர். அதன் பின்,  ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்தார்.  ஆனாலும்,  பொதுவெளியில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமீர் தரப்பினர்…

மேலும் படிக்க

இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்..!!

செவிலியர் – மக்கள்தொகை விகிதம் 1:476 ஆக உள்ளது.  தேசிய மருத்துவ ஆணையத்தின் தகவல்படி 2022 ஜூன் நிலவரப்படி 13,08,009 ஆங்கில முறை மருத்துவர்கள் மாநில மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர்.மேலும் 5.65 லட்சம் ஆயுஷ் மருத்துவர்கள் உள்ளனர். அந்த வகையில், நாட்டில் மருத்துவர்கள்- மக்கள்தொகை விகிதம் 1: 834 ஆக உள்ளது.  மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதனால் நாட்டில் மருத்துவம் பயில்வோரின் எண்ணிக்கையும்…

மேலும் படிக்க

காஸாவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கொண்டுவர வலியுறுத்தி ஐநா பொதுச்சபையில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா..!!

பாலஸ்தீனத்தின் காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 18,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 80% சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் தங்களின் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகள் உடனடியாக இந்த போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் போரால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் செய்யப்பட்ட வேண்டும், பிணைக் கைதிகள் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஐநா பொதுச்சபையில்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram