Media

ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பால், வில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை களைகட்டி உள்ளது..!!

 பால்வரத்து குறைவால் பால்கோவா உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு நிலவுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது ஆண்டாள் கோயிலும், பால்கோவாவும்தான். அனைத்து இடங்களிலும் பால்கோவா உற்பத்தி செய்யப்பட்டாலும், வில்லிபுத்தூர் பால்கோவாவுக்கென தனித்துவமான சுவை, மணம் உண்டு. இதனால் கடந்த 2019-ம் ஆண்டு இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தமிழகம் மட்டுமின்றி, தேசிய அளவிலும் புகழ் பெற்று வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களும், ஆயிரத்துக்கும்…

மேலும் படிக்க

‘ஆஸ்கர் விருதுக்காக’, சிறந்த வெளிநாட்டு படப் பிரிவிற்கு அனுப்பப்பட்ட கேரள திரைப்படமான “டூ கில் ஏ டைகர்” என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்பட பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது..!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 2024 மார்ச் 10-ம் தேதி 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளதாக தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகளை பெறும் படங்கள் 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் அதிகப்படியான வாக்குகளை பெறும் படங்கள் இறுதி கட்ட நியமனங்களுக்குத் தேர்வாகும் என அறிவித்துள்ளது. இதற்கான வாக்குப்பதிவு 2024ஆம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி முதல்…

மேலும் படிக்க

மதுரை விளாச்சேரி கால்வாய் உடைந்தால் வடிவேல் கரை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது..!!  

மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியம் விளாச்சேரி கிராமத்தின் வழியாக நாகமலை புதுக்கோட்டையில் இருந்து நிலையூர் கன்மாயிக்கு தண்ணீர் செல்வது வழக்கம். இந்நிலைலயில் நிலையூர் கம்பிக்குடி பாசன கால்வாயின் வடிவேல் கரை பகுதியில் உள்ள கால்வாய்க்கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது.வடிவேல் கரை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  இந்த பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால்,  பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.இந்த பாசன கால்வாயில் நீர் வரத்து அதிகமாக இருக்கும் போதெல்லாம், இதுபோன்று அடிக்கடி உடைப்பு…

மேலும் படிக்க

ஆன்லைனில் பார்ட் டைம் வேலை எனக்கூறி நூதன முறையில் மோசடி..!! பெங்களூரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்..!!

 வாலட் கணக்கு உருவாக்கப்பட்டு அதில் ரூ.10,000 முன்பணம் கட்டச்சொல்லி உள்ளனர்.  மேலும்,  திறன் அடிப்படையில் செய்யும் வேலைக்கு ரேட்டிங்வழங்கப்படும் எனவும்,  ஒரு சுற்றுக்கு 30 டாஸ்க்கள் இருக்கும். ஒரு நாளுக்கு 3ரவுண்ட் வரை வேலை செய்யலாம்.  ஏர் டிக்கெட் புக்கிங் ஆவதை பொறுத்து 6 சதவிகிதகமிஷன் அடிப்படையில் பணம் கிடைக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது.  அதன் அடிப்படையில் வேலை செய்த வங்கிக் கணக்கில் ரூ.53,700 செலுத்தப்பட்டிருக்கிறது. இதனால் உற்சாகமான ரம்யா மிகவும் ஆர்வத்துடன் தொடர்ந்து வேலை செய்துள்ளார். தொடர்ந்து…

மேலும் படிக்க

என்னுடைய கணவர் அரசியலுக்கு வராதது எனக்கு வருத்தமாக தான் உள்ளது : லதா ரஜினிகாந்த்..!! 

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தை தயாரிப்பதற்காக மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் முரளி, ‘ஆட் பீரோ’ நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றார். இதற்காக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்து இட்டிருந்தார். பின்னர் முரளி கடனாக பெற்ற பணத்தை அபிர்சந்த் நஹாருக்கு திரும்ப அளிக்காததால் முரளி, லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015-ம் ஆண்டு அபிர்சந்த் நஹார் பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில்…

மேலும் படிக்க

மல்லிகை பூ விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி..!!

சத்தியமங்கலம் மலர் சந்தையில் கடந்த நான்கு நாட்களாக, மல்லிகை விலை கிலோ ரூ.1,000-க்கு மேல் விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்துள்ள தாண்டம்பாளையம், சிக்கரசம் பாளையம், வடவள்ளி, ராஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 2,000 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, முல்லை, காக்கடா, சாதிமல்லி, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு பறிக்கப்படும் பூக்கள், சத்திய மங்கலத்தில் செயல்படும் தமிழ்நாடு மலர்கள் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் மலர்…

மேலும் படிக்க

‘கஜா புயல்’ டெல்டாவைத் தாக்கியபோது மாமனார் வீட்டு விசேஷத்தைச் சிறப்பித்துக் கொண்டிருந்த பழனிசாமி, வெள்ள பாதிப்பின்போது மக்களோடு களத்தில் நிற்கும் எங்கள் இளைஞரணிச் செயலாளரை விமர்சிப்பதா? : ஆர்.எஸ்.பாரதி..!!

 சேலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து எப்போதாவது வெளியில் வந்து முகத்தைக் காட்டி விட்டு மீண்டும் வீட்டுக்குள் பதுங்கிக் கொள்வதையே வழக்கமாக வைத்திருப்பவர்தான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி. நானும் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காகத் திருவாய் மலர்ந்து பேட்டிகள் கொடுப்பார். சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னால் மக்கள் மன்றத்தால் நிராகரிக்கப்பட்டு, ஒதுக்கித் தள்ளப்பட்ட பழனிசாமி, தோல்வியை மட்டுமே தனது கட்சிக்கு வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறார். சென்னையைச் சுற்றிலும், நெல்லையைச் சுற்றிலும் பாதிக்கப்பட்ட மக்களைச்…

மேலும் படிக்க

திருவாரூரில் தென்னிந்திய அளவிலான மகளிர் கோகோ விளையாட்டுப் போட்டி தொடங்கியது..!!

திருவாரூர் அருகே நீலக்குடி கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கான மகளிர் கோகோ போட்டிகள் இன்று (டிச.26) தொடங்கி டிச. 30-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.முதல்முறையாக மத்திய அரசு சார்பில் தென்னிந்திய பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் பெண்களுக்கான மகளிர் கோகோ போட்டிகள் இன்று தொடங்கியது. பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் போட்டிகள் நடைபெற்றன. போட்டிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய பல்கலைக்கழகங்களின் சங்க…

மேலும் படிக்க

“ஹிட்லர்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது..!!

சஞ்சய் குமார் தயாரிப்பில், தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமாக “ஹிட்லர்” உருவாகிவருகிறது. முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக விஜய் ஆண்டனியின் தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார்.  முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார் படத்தின்…

மேலும் படிக்க

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன..!!

இந்தியாவிலும் சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் அடுத்தடுத்து வரும் நிலையில், இந்த தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிப்பு புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நாடுகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.இந்த நிலையில், கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் தொற்று சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், கண்காணிப்பு…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram