Media

தமிழகத்தில் 4 இடங்களில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ ‘FOOD STREET’- ரூ. 4 கோடியில் அமைக்க திட்டம்

சென்னை: தமிழகத்தில் 4 இடங்களில் ரூ. 4 கோடி செலவில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்து. நாடு முழுவதும் 100 ஆரோக்கியமான உணவு வீதிகளை உருவாக்கும் உணவு வீதி திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயல்படுத்த உள்ளது. உணவு வர்த்தகங்கள் மற்றும் பொதுமக்களிடையே பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை ஊக்கப்படுத்தி, அதன் வாயிலாக உணவால் ஏற்படும் நோய்களைக் குறைத்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதை செயல்படுத்துவதற்கு சோதனை…

மேலும் படிக்க

 “திராவிட மாடலே இனி அனைத்து மாநில ஆட்சி நிர்வாக ஃபார்முலா” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “தமிழகத்தின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கிறது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில், “பத்தாண்டுகால இருண்ட ஆட்சியை விரட்டி, நாம் விடியல் தருவோம் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியை தந்து, ஆட்சி செய்வதற்கான…

மேலும் படிக்க

😮 நடிகர் சரத்பாபு உயிரிழந்ததாக வரும் செய்திகள் தவறானவை – குடும்பத்தினர் விளக்கம் 😮

மூத்த தமிழ் நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை குறித்த வதந்திக்கு அவரது குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்தவர் சரத்பாபு. தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சரத்பாபுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால் அவரது உடல்நிலை…

மேலும் படிக்க

”திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை” தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தனியார் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்தார். அப்போது திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கூறி வரும் திராவிட மாடல் குறித்து விமர்சித்தார். இதுகுறித்து பேசிய அவர், “திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி. திராவிட மாடல் என்று எதுவும் இல்லை. அது வெறும் அரசியல் வாசகம் மட்டுமே. திராவிட மாடல் கொள்கைகள் ‘ஒரே நாடு, ஒரே பாரதம்’ கொள்கைக்கு எதிரானது. இந்த கொள்கை சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள், வரலாற்றை…

மேலும் படிக்க

😭 நடிகரும், இயக்குநருமான மனோபாலா காலமானார்!

நடிகரும், திரைப்பட இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தமிழ் சினிமாவின் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் என்று பன்முகத்திறமைகளைக் கொண்டவர் தான் மனோபாலா. இவர் ஆரம்ப காலத்தில் இயக்குநராக இருந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். மனோபாலா 20 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஜூலை 2009 வரை 175 திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், 1985-ல்…

மேலும் படிக்க

இன்று கன மழை எச்சரிக்கை…

சென்னை: ‘புதுச்சேரி உள்பட, 22 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும். வரும் 7, 8ம் தேதிகளில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது வளி மண்டலத்தின் கீழடுக்கில் மேற்கு திசை காற்றும், கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு அதிகரித்துள்ளது. நிலப் பகுதியிலும் ஈரப்பதத்தின் அளவு குவிந்துள்ளதால், மாநிலம் முழுதும் மழைக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில், நேற்று…

மேலும் படிக்க

கருணாநிதி நூற்றாண்டு விழா! இந்தியாவே திரும்பிப் பார்க்கணும்! 1 ஆண்டு திமுக நான் ஸ்டாப் கொண்டாட்டம்!

சென்னை: இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஜூன் 3 2023 முதல் ஜூன் 3 2024 வரை தொண்டர்களின் இல்ல விழாவாக – மக்கள் விழாவாக – கொள்கை விழாவாக கொண்டாட வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு; கருணாநிதி…

மேலும் படிக்க

தமிழக வேளாண் பட்ஜெட்டில் பெரிய திட்டம் இல்லை: எடப்பாடி பேட்டி

சென்னை: தலைமைச்செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: வேளாண் மானிய கோரிக்கையில் என்னென்ன இடம்பெற்றுள்ளதோ அதேதான் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. வேளாண் பெருமக்களுக்கு பெரிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. நீர்நிலைகளை பாதுகாக்க அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை கைவிட்டுள்ளனர். அதேபோல, கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத்தொகை பற்றி பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. தமிழ்நாடு விவசாயிகளுக்கு பெரிய திட்டங்கள் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை. விவசாயிகள் பயன் அடையும்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram