Media

சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா ஆகியோர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து, கர்நாடக முதல்-மந்திரி பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு

18.05.2023 மற்றும் 19.05.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20.05.2023 முதல் 22.05.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18.05.2023, 19.05.2023 & 20.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்….

மேலும் படிக்க

கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா-CONGRESS.அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கர்நாடாகாவில் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டிகே சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது. இருவரையும் கட்சி மேலிடம் அழைத்து பேசியது 5 நாட்களாக பரபரப்பு நீடித்த நிலையில், இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டிகே சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒருமித்த கருத்துடன் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது….

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை | NO BAN FOR JALLIKATTU

ஜல்லிகட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன இதற்கிடையே கோர்ட்டு உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு இடையில் தடை ஏற்பட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராடினர். இதனையடுத்து தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜல்லிகட்டு போட்டிகளை…

மேலும் படிக்க

கோடை வெயிலுக்கு பூ வியாபாரி உயிரிழப்பு !

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும் பின்னர் படிப்படியாக அதிகரித்து, நேற்று 19 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 108.9 டிகிரி ஃபேரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனிடையே வேலூர் அடுத்த பொய்கை சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்ற பூ வியாபாரி, 108 டிகிரி ஃபேரன்ஹீட் வெப்பத்தை தாங்க முடியாமல் மயங்கி விழுந்து உயிரிழந்தார். முருகனுக்கு சர்க்கரை நோய்,…

மேலும் படிக்க

கருணாநிதி பிறந்தநாளில் அனைத்து சத்துணவு, குழந்தைகள் மையங்களில் இனிப்புப் பொங்கல்

 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் 17.04.2023 அன்று நடைபெற்ற பொழுது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர், சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்களுக்கு முன்னாள் முதலமைச்சர்களின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அறிவிப்பு செய்தார். சத்துணவு/குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்களுக்கு…

மேலும் படிக்க

சென்னையில் வெயிலின் தாக்கம் உயர காரணம் என்ன ?

சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது. வங்க கடலில் கடந்த வாரம் உருவான மோக்கா புயல், கடந்த 13 மற்றும் 14-ந் தேதிகளில் கரையை கடந்தது. இதனால் சென்னை கடல் பகுதிகளில் அந்த 2 நாட்கள் கடல் காற்று இல்லாமல் போய்விட்டது. கடந்த 15-ந் தேதி (நேற்று முன்தினம்) கடல் காற்று…

மேலும் படிக்க

சென்னையில் லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை | LYCA PRODUCTION

லைகா நிறுவனம் தமிழில் பல பெரிய திரைப்படங்களை தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த நிறுவனம் தயாரித்த ‘பொன்னியின் செல்வன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சென்னையில், லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி, சென்னை தி.நகரில் உள்ள லைகா நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தவிர்த்து அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று…

மேலும் படிக்க

“தமிழ்நாடு அரசு மதுவிலக்கை நோக்கி நகர வேண்டும்”

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; நச்சு சாராயத்தை அருந்தி 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. வேதனையை தருகிறது. தமிழக முதல் அமைச்சர், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்திருப்பது ஆறுதலை தருகிறது. கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்திருந்தாலும், தமிழக அரசு அதை தாண்டி சிந்திக்க வேண்டிய தேவை எழுந்திருப்பதாக விசிக கருதுகிறது. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என திமுக…

மேலும் படிக்க

சாலை விதிமீறலா ? – இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது- புதிய நடைமுறைகள் அறிமுகம்

மத்திய அரசின் வழகாட்டுதல்களை பின்பற்றி புதிய நடைமுறைகளை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில், போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிக வேகம், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தல், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல், சிக்னல்களை மீறிச்செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல், இதர வாகனங்களை தாறுமாறாக முந்திச் செல்லுதல், ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, விதிமீறும் வாகனங்கள்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram