தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு
தமிழகத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் நாளையுடன் (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. இது பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. இருப்பினும் மேலும் சில தினங்களுக்கு கடும் வெப்பம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் தலா 107 டிகிரி, வேலூரில் 106 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம் 104 டிகிரி, பாளையங்கோட்டை, புதுச்சேரி, நாகப்பட்டினம், மதுரை, மதுரை விமான…