Media

பொங்கலுக்கு நாளை வெளியாகும் 4 திரைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் எப்போதும் பண்டிகை தினங்களான தீபாவளி,  பொங்கலுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம்.  அப்படங்கள் குடும்பங்களுடன் கொண்டாடப்படுவது வழக்கம்.  அந்த வகையில் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு நான்கு படங்கள் வெளியாக உள்ளன.  திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்களை இங்கு காண்போம்.பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு கேப்டன் மில்லர்,  அயலான்,  மிஷன் சேப்டர்-1, மெரி கிறிஸ்துமஸ் ஆகிய திரைப்படங்கள் நாளை திரையரங்குகளில் வெளிவரவுள்ளன.

மேலும் படிக்க

வெங்காய விலை குறைவால் விவசாயிகள் கண்ணீர்..!!

தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டுமாம்’’ என கிராமங்களில் கேலியாக சொல்லப்படும் பழமொழிக்கு ஏற்ப பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் உற்பத்தி செலவுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். பெரம்பலூர்…

மேலும் படிக்க

மார்க் சக்கர்பெர்க் புதிதாக மாட்டு இறைச்சி தொழில் செய்ய முடிவு செய்திருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்..!!

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் நிறுவனரான மார்க் சக்கர்பர்க், பல்வேறு துறைகளில் தடம் பதித்து பல சாதனைகளையும் புரிந்துள்ளார். அந்தவகையில் தற்போது மாடு வளர்ப்பு தொழிலில் களமிறங்கியுள்ளார். மாடுகளுக்கு சோளம், புற்கள் மற்றும் தீவணத்தைப் போட்டுப் பார்த்திருப்போம். ஆனால், மார்க் தனது நிறுவனத்தின் சிறந்த மாட்டு இறைச்சியை உருவாக்குவதற்காக தங்கள் பண்ணையில் உள்ள மாடுகளுக்கு உலர் கொட்டைகள், உள்ளூரில் தயாரிக்கப்படும் பீர் ஆகிவற்றை கொடுத்து வளர்த்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.வேலைப்பளுவுக்கு நடுவிலும் மார்க் சக்கர்பெர்க் தனக்குப் பிடித்ததைச் செய்யத்…

மேலும் படிக்க

மாலத்தீவு : இந்திய சுற்றுலாத் தலங்கள் குறித்து தோனி பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..!!

மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் முயற்சி இருப்பதாக பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன.  இதையடுத்து,  பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து,  மாலத்தீவு அமைச்சர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டனர்.  மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினர், கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், நடிகர் ரன்வீர் சிங்,  நடிகர் அக்சய்…

மேலும் படிக்க

கேப்டன் மில்லர் திரைப்படம் தீயாக இருக்கிறது ஜி.வி.பிரகாஷ் குமார்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.  இப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  இதில் பிரியங்கா மோகன்,  நிவேதிதா சதிஷ்,  ஜான் கொக்கன்,  சுமேஷ்  மூர்,  கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.தனுஷின் பிறந்தநாளன்று திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.  படத்தின் டீசர் மற்றும்  பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  ஜனவரி 12 அன்று திரைப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப்…

மேலும் படிக்க

தொலைக்காட்சி நேரலையின் போது, துப்பாக்கியுடன் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,  அந்நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் கும்பலின் தலைவர்கள் இரண்டு பேர் சில தினங்களுக்கு முன்னர் சிறையில் இருந்து தப்பியதால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் நாட்டில் அமைதியை நிலைநாட்ட அதிபர் டேனியல் நோபாவா அவசர நிலையை பிரகடனம் செய்வதாக அறிவித்தார்.  இதனைத் தொடர்ந்து நாட்டின் பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின.  ஈக்வடார்…

மேலும் படிக்க

4 மாவட்டங்களில் இன்று (ஜன.9) கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்..!!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதோடு,பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், இன்று (09.01.2024) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக…

மேலும் படிக்க

தங்கம் விலை குறைந்தது..!!

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின்விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.50,400-க்குவிற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.77,800 ஆகஇருந்தது. இந்நிலையில், ஆபரணத் தங்கம் விலை நேற்று குறைந்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,830-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640-க்கும்…

மேலும் படிக்க

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!

இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.  இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.  பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.  இதேபோன்று,  இந்தோனேஷியாவின் வடகடலோரப் பகுதியில் இன்று அதிகாலை 3.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.5 ஆக பதிவாகி இருந்தது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.  நிலநடுக்கத்தால் அந்நாட்டில் பரபரப்பான சூழ்நிலை நிலவி…

மேலும் படிக்க

தனியார் நிறுவன பெண் அதிகாரி தனது 4 வயது மகனை கொலை செய்து சடலத்தை சூட்கேஸில் அடைத்து காரில் சென்ற போது கைது செய்யப்பட்டார்..!! 

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் Minfful Al Lab எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றி வருபவர் சுச்சனா சேத் (39). இவர் கடந்த 6-ம் தேதி வடக்கு கோவாவில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் தனது 4 வயது மகனுடன் அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று அதிகாலை ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு அவர் காரில் பெங்களூரு திரும்பினார். அந்த பெண் தங்கியிருந்த ஒட்டல் அறையை ஊழியர் சுத்தம் செய்தபோது அங்கு ரத்தக்கறைகள்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram