Media

பூமியைப் போன்று வாழ்வதற்கு ஏற்ற சூழல் கொண்ட ‘சூப்பர் எர்த்’..!!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உயிர்கள் வாழக்கூடிய சூப்பர் எர்த் என்ற  கிரகத்தை கண்டறிந்துள்ளது.  TOI-715 b என்று பெயரிடப்பட்ட இந்த கிரகம் சூரிய குடும்பத்திலிருந்து சுமார் 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.  இது பூமியை விட ஒன்றரை மடங்கு அகலம் கொண்டதாகும்.  

மேலும் படிக்க

ரிசர்வ் வங்கியிடம் பேடிஎம் சிக்கியது..!!

டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கி ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.  கடந்த மார்ச் மாதமே புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்து அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தணிக்கையாளர்கள் குழுவை ரிசர்வ் வங்கி நியமித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக,  தற்போது விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி அந் நிறுவனத்தையே ஒட்டுமொத்தமாக முடக்கியுள்ளது ரிசர்வ் வங்கி. 

மேலும் படிக்க

“என்னை இன்னும் ஆபாச பட நடிகையாகவே பார்க்கின்றனர்”~ நடிகை சன்னி லியோன்..!!

தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் குத்தாட்டம் போட்ட சன்னி லியோன் கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் தமிழில் வெளியான ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் முதன்மையான கதாபாத்திரதத்தில் நடித்திருந்தார்.  இந்த நிலையில் சன்னி லியோன் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.“நான் ஆபாச பட நடிகையாக தைரியமாக வெளிப்படுத்தி இருக்கிறேன்.  அந்த படங்களில் நடித்து இருப்பது அனைவருக்குமே தெரியும்.  ஆனால் சினிமாவுக்கு வந்த பிறகு அப்படி இல்லை.  நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.  வெளியில்…

மேலும் படிக்க

சண்டிகர் : மேயர் பதவிக்கான தேர்தலில் பாஜகவின் மனோஜ் சோங்கர், மேயர் பதவியை கைப்பற்றினார்..!!

தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மசிஹின் நோய்வாய்ப் பட்டுள்ளதால், தேர்தல் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. அத்துடன் பிப்.6-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  இதனை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தியதால் தேர்தல் தேதியை ஜனவரி 18-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 6-ம் தேதிக்கு சண்டிகர் துணை ஆணையர் ஒத்திவைத்தார். இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது கடந்த ஜன. 24-ம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, ஜனவரி…

மேலும் படிக்க

ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஜோடி காதல் திருமணம்..!!

கடலூர் மாவட்டம்,  வேப்பூர் அடுத்த பா.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் பார்த்தசாரதி. இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த முனுசாமியின் மகள் சுசித்ரா இருவரும் ஒரே சமுகத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் பார்த்தசாரதி – சுசித்ரா இருவரும் காதலித்து வந்தனர்.  இதையடுத்து, இவர்களின் காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.  பெண்ணின் பொற்றோர் பார்த்தசாரதியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை வீடு புகுந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.  மேலும், பார்த்தசாரதியின் தந்தையான அண்ணாதுரையை அதே கிராமத்தில் அரை நிர்வாணமாக…

மேலும் படிக்க

தமிழ் செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல்..!! 

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு.  இவர் நேற்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதும், மற்ற நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் நோட்டம் விட்டுள்ளனர். இவரைப் பற்றிய தகவல்களையும் விசாரித்துள்ளனர்.இதையடுத்து மீண்டும் மர்ம நபர்கள் பின்தொடர பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குச் சென்று மீண்டும் மீண்டும் காவல்துறையினரின் உதவியை நேசபிரபு கேட்டுள்ளார். அவ்வாறு காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை…

மேலும் படிக்க

தென்ஆப்பிரிக்காவில் நடந்த கொடூரம்..!!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள 5 மாடி குடியிருப்பில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. காற்று வேகத்தால் இந்த தீ வேகமாக பரவி கட்டிடம் முழுவதும் தீக்கிரையானது. இதில் குழந்தைகள் உள்பட  76 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தென்னாப்பிரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இத்தீவிபத்துக்கான காரணத்தை அந்நாட்டு அரசு விசாரித்து வந்தது. இந்நிலையில், இத்தீவிபத்துக்கான குற்றாவாளியை தென்னாப்பிரிக்க அரசு நேற்று கைது செய்துள்ளது. விசாரணையில் அவர் அளித்த…

மேலும் படிக்க

இந்தியாவில் 10,000+ கார்களை உற்பத்தி செய்து அசத்தியுள்ளது ‘Volvo’..!!

கடந்த 2017-ம் ஆண்டு முதல் பெங்களூருவில் கார்களை அசெம்பிள் செய்து வருகிறது வோல்வோ. எக்ஸ்சி90, எக்ஸ்சி60, எஸ்90, எக்ஸ்சி40 ரீசார்ஜ் மற்றும் சி40 ரீசார்ஜ் மாடல் கார்கள் இங்கு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் எக்ஸ்சி60 மாடல் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 4,000 யூனிட் எக்ஸ்சி60 கார்கள் இதில் அடங்கும். இருந்தும் இந்தியாவில் வோல்வோவின் 10,000-மாவது காராக எக்ஸ்சி40 ரீசார்ஜ் மாடல் உருவாகி உள்ளது. இதற்கு ‘மேக் இன் இந்தியா’ திட்டம் சிறந்த வகையில் பயன் அளித்ததாக…

மேலும் படிக்க

வெளிநாட்டு மருத்துவர்கள் இந்தியாவில் சேவை..!!

இந்தியாவிலும்,  வெளிநாடுகளிலும் மருத்துவம் பயிலும் இந்தியர்கள்,  பல்வேறு மாநிலங்களில் மருத்துவ சேவையாற்ற சம்பந்தப்பட்ட மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வது கட்டாயம்.  இதற்கான வழிகாட்டுதல்களையும்,  விதிமுறைகளையும் தேசிய மருத்துவ ஆணையம் வகுத்துள்ளது.  இந்தியாவில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்ளனர்.இதனைத் தொடர்ந்து வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வந்து மருத்துவம் பயிலவும்,  மருத்துவ சேவையாற்றவும் தற்காலிக பதிவு நடைமுறையையும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) கொண்டு வந்துள்ளது.   அதன்படி வெளிநாட்டு மருத்துவர்கள், இந்தியாவில் மருத்துவம் பயிலவும், மருத்துவ…

மேலும் படிக்க

பாலஸ்தீனத்தில் தொடரும் போர்..!!

இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.  இந்நிலையில்,  காசாமுனையில் உள்ள பணைய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.  ஆனால், இன்னும் 129 பேர் காசாவில் பணைய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வந்தது.  இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.  வான்வழி,  தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.  இதனால்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram